Close

DLSA, Dindigul – LADCS – Notification

Publish Date : 28/08/2024

செ.வெ.எண்:-75/2024

நாள்: 26.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில், துணை சட்ட ஆலோசகர், உதவி சட்ட ஆலோசகர், உதவியாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு, சென்னை அவர்களின் உத்தரவுபடி, திண்டுக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்க உள்ள (Legal Aid Defense Counsel System) அலுவலகத்திற்கு துணை சட்ட ஆலோசகர்(Deputy Chief Legal Aid Defense Counsel), உதவி சட்ட ஆலோசகர்(Assistant Legal Aid Defense Counsel), உதவியாளர்(Office Assistant / Clerk) மற்றும் அலுவலக உதவியாளர்(Office Peon (Munshi / Attendant) ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளது.

அதன்படி, துணை சட்ட ஆலோசகர் 2 பணியிடங்கள், உதவி சட்ட ஆலோசகர் 4 பணியிடங்கள், உதவியாளர் ஒரு பணியிடம், அலுவலக உதவியாளர் 2 பணியிடங்கள் என மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இந்த காலிபணியிடங்கள் குறித்த அனைத்து விரிவான விபரங்கள், விண்ணப்பங்கள் மற்றும் இதர தகவல்களை https://dindigul.dcourts.gov.in/ என்ற இணைணயதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து இப்பதவிகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 06.09.2024 தேதி மாலை 05.45 மணிக்குள் “செயலாளர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாற்று சமரசதீர்வு மைய கட்டடம், திண்டுக்கல்-624004“ என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ அனுப்பி வைக்க வேண்டும், என முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.