Close

E-Shram – Migrant Labours – New Ration Card

Publish Date : 06/09/2024

செ.வெ.எண்:-05/2024

நாள்:-03.09.2024

திண்டுக்கல் மாவட்டம்

வெளிமாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வரும் குடும்ப அட்டை இல்லாத தொழிலாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளி மாநிலங்களிலிருந்து நிரந்தரமாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் வேறு எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள், புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு www.eshram.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் மனுதாரர் உரிய விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலரால் மேற்கண்ட மனுக்களின் மீது விசாரணை செய்து நிரந்தரமாக தமிழ்நாட்டில் தங்கியுள்ளவர்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் தற்காலிகமாக அல்லது குறுகிய காலத்திற்கு புலம் பெயர்ந்து அவர்களது சொந்த மாநிலத்தில் குடும்ப அட்டை இல்லாதவர்கள் www.eshram.gov.in வலைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், மனுதாரர் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளிக்கலாம். மேற்கண்ட மனுவினை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களின் மூலம் மனுதாரர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு புதிய குடும்ப அட்டை பெற்றவுடன் தமிழ்நாட்டில் “ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை” திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற்று பயன் பெறலாம்.

எனவே வெளிமாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வரும் குடும்ப அட்டை இல்லாத தொழிலாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் புதிய குடும்ப அட்டை கோரி www.eshram.gov.in வலைதளத்தில் விண்ணப்பம் செய்து பயன் பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.