Close

Fly world Shares Announcement

Publish Date : 09/09/2024

செ.வெ.எண்:-16/2024

நாள்:-08.09.2024

திண்டுக்கல் மாவட்டம்

நீதிமன்று உத்தரவிற்கிணங்க 2 வாகனங்கள் பொது ஏலம் மூலம் 09.10.2024 அன்று விற்பனை செய்யப்படவுள்ளது – மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக்முகையதீன் அவர்கள் தகவல்.

மாண்பமை மதுரை டான்பிட் சிறப்பு நீதிமன்றம் உத்தரவில், மதுரை மாவட்டம் ‘FLY WORLD SHARES Pvt Ltd” நிறுவனம் முதலீட்டாளர்களிடம் தொகையினை பெற்று நிதி மோசடி செய்தது தொடர்பாக மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு-II காவல் துறையினரால் வழக்கு எண் 4/2021 U/s 406, 420, 120-b, IPC மற்றும் Sec 5 of TNPID Act-தீர்ப்பின்படி எதிரிகளுக்கு சொந்தமான அசையும் சொத்துக்களான வாகனங்களை உரிய விலை நிர்ணயம் செய்த பிறகு பொது ஏலம் விட்டு தொகையினை சம்பந்தப்பட்ட வழக்கு கணக்கில் வரவு(Cash account) வைக்குமாறும் நீதிமன்ற தீர்ப்புரையில் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்படி நீதிமன்று உத்தரவிற்கிணங்க, நிறுவனங்களின் அசையும் சொத்துக்களான TN- 69-BH-0001(மாடல் 02/2015 டீசல்) பிஎம்டபிள்யூ கார்(3 Series GT with Auto TR) மதிப்பு ரூ. 12,20,000 மற்றும் TN-57-BL-2552 Bike(மாடல்l 07/2020) கவாஸ்கிநின்ஜா 650 சிசி, இருசக்கர வாகனம் மதிப்பு ரூ.3,25,000 ஆகிய இரண்டு வாகனங்கள் திண்டுக்கல் தகுதி பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரால் 09.10.2024 அன்று முற்பகல் 11.00 மணிக்கு திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொது ஏலம் நடத்தப்படவுள்ளது.

வாகன விபரங்கள் மற்றும் ஏல நிபந்தனைகள் உள்ளிட்ட கூடுதல் விபரங்களை அலுவலக டான்பிட் பிரிவில் தெரிந்து கொள்ளலாம், என தகுதிபெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக்முகையதீன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.