DDAWO-ID CARD CAMP
செ.வெ.எண்:-20/2024
நாள்:-09.09.2024
திண்டுக்கல் மாவட்டம்
கொடைக்கானல் வட்டம், கே.சி.பட்டியில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவச்சான்று வழங்கும் சிறப்பு முகாம் 10.09.2024 அன்று நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், கே.சி.பட்டியில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவச்சான்று வழங்கும் சிறப்பு முகாம் கே.சி.பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10.09.2024 அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது.
இம்முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவர், மன நல மருத்துவர் மற்றும் கண் மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச்சான்று வழங்க உள்ளனர். மேற்படி மருத்துவ அலுவலர்கள் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.
இதுநாள் வரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படத்துடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் இதுநாள்வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை(UDID) பெறாத மாற்றுத்திறனாளிகள் மேற்படி முகாமில் மேற்கூறிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம். அனைத்து ஆவணங்களும் தெளிவான நகல் எடுத்து வரவேண்டும்
எனவே, இந்த சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் உரிய ஆவணங்களுடன் கலந்துகொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை(UDID) பெற விண்ணப்பித்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.