Close

Cracker Permission – Notification

Publish Date : 09/10/2024

செ.வெ.எண்:10/2024

நாள்:-04.10.2024

திண்டுக்கல் மாவட்டம்

தீபாவளி பண்டிகையையொட்டி, தற்காலிக பட்டாசுக் கடை உரிமம் பெற விரும்பும் வணிகர்கள் இணையதளம் வாயிலாக 19.10.2024-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி, தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனை செய்வதற்கு மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தற்காலிக பட்டாசுக் கடை உரிமம் பெற விரும்பும் வணிகர்கள் இணையதளம் (https://www.tnesevai.tn.gov.in) வாயிலாக, 19.10.2024-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.

தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசுக் கடைகளுக்கான உரிம உத்தரவுகளை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனுமதியின்றி, உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க உரிமம் கோரி விண்ணப்பம் அளிப்போர் வெடிபொருள் சட்ட விதிகள் 2008-ல் சொல்லப்பட்டுள்ள விதிகளின் படி, தங்களுடைய விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் 19.10.2024-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத, ஆட்சேபனையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தைத் தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும். விபத்தில்லாத தீபாவளி பண்டிகையை கொண்டாடிட அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.