Close

Tasmac Closed

Publish Date : 29/10/2024

செ.வெ.எண்:-67/2024

நாள்:-28.10.2024

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட எல்லையோரத்தில் அமைந்துள்ள, அரசு மதுபானக் கடைகள், அத்துடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மனமகிழ் மன்றத்தில் அமைந்துள்ள மதுபானக் கூடம் ஆகியவற்றை 29.10.2024 அன்று முழுவதும், 30.10.2024 அன்று மாலை 5.00 மணி வரை மூடப்பட்டிருக்கும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன் நகரில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை தினம் 30.10.2024 அன்று அனுசரிக்கப்பட இருப்பதால், பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கினை பாதுகாக்கும் பொருட்டும், குருபூஜை நிகழ்வு அமைதியாக நடைபெறும் பொருட்டும், திண்டுக்கல் மாவட்ட எல்லையோரத்தில் அமைந்துள்ள, அரசு மதுபானக் கடைகள், அத்துடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மனமகிழ் மன்றத்தில் அமைந்துள்ள மதுபானக் கூடம் ஆகியவற்றை 29.10.2024 அன்று முழுவதும், 30.10.2024 அன்று மாலை 5.00 மணி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனுார் பகுதியில் கொடைரோடு(கடை எண் 3161), மாலையகவுண்டன்பட்டி(கடை எண் 3162), பள்ளபட்டி சிப்காட்(கடை எண் 3342), கொடைரோடு (எப்எல் 2 உரிமம் எண் 38/2020-2021(பார்), விளாம்பட்டி பகுதியில் கிருஷ்ணாபுரம்(கடை எண் 3345), விளாம்பட்டி(கடை எண் 3343), அணைபட்டி(கடை எண்3341), விருவீடு பகுதியில் ரெங்கப்பநாயக்கன்பட்டி(கடை எண் 3318), விருவீடு (கடை எண் 3344) ஆகிய பகுதிகளில் உள்ள மதுக்கடைகள், மதுபானக் கூடங்கள் மூடப்பட்டிருக்கும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.