Close

National Unity Day Pledge

Publish Date : 04/11/2024
.

செ.வெ.எண்:-77/2024

நாள்:-30.10.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் “தேசிய ஒற்றுமை தினம்“ உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய ஒற்றுமை தினத்தை(அக்டோபர் 31) முன்னிட்டு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைகுமார் அவர்கள் தலைமையில், அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் இன்று(30.10.2024) “தேசிய ஒற்றுமை தினம்“ உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

மறைந்த சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், அக்டோபர் 31-ஆம் தேதியன்று நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை தினம் இந்திய அரசு சார்பில் கடைப்பிடிக்கிறது. தேசிய ஒருமைப்பாட்டின் மூலம் சுதந்திர இந்தியாவின் சிற்பியாக சர்தார் வல்லபாய் படேலின் பங்களிப்பை இந்தச் சந்தர்ப்பம் அங்கீகரிக்கிறது. தேசத்தின் பாதுகாப்பு, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தாங்கும் நமது மக்களின் உள்ளார்ந்த வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தும் நாள் இதுவாகும். அதன்படி, “தேசிய ஒற்றுமை தினம்“ உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி இன்று(30.10.2024) நடைபெற்றது.

அதன்படி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைகுமார் அவர்கள், “இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும், இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும், உளமார உறுதியளிக்கிறேன். சர்தார் வல்லபாய் படேலின் தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன்” என “தேசிய ஒற்றுமை தினம்“ உறுதிமொழியை வாசிக்க அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், தனி வட்டாட்சியர்(இலங்கைத் தமிழர் மறுவாழ்வு நலன்) திரு.பொ.சரவணக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.