Close

DRDA Commissioner Inspection-Meeting

Publish Date : 11/11/2024
.

செ.வெ.எண்:-12/2024

நாள்:-09.11.2024

திண்டுக்கல் மாவட்டம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் திரு.பி.பொன்னையா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் திரு.பி.பொன்னையா, இ.ஆ.ப., அவர்கள் இன்று(09.11.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் கனவு இல்லம், ஊரக குடியிருப்புகள் பழுது நீக்கம், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம், ஆத்துப்பட்டி பகுதியில் குடகனாறு ஆற்றின் குறுக்கே ஆத்துப்பட்டி மற்றும் மால்வார்பட்டியை இணைக்கும் வகையில் ரூ.6.93 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலம், குரும்பப்பட்டி ஊராட்சி, இராமையம்பட்டி, மாங்கரை ஊராட்சி, நடுப்பட்டி ஆகிய இடங்களில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டும் பணிகள், மாங்கரை ஊராட்சியில் கிராமப்புற வீடு பழுதுபார்த்தல் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், மாங்கரை ஆற்றின் குறுக்கே மாங்கரை முதல் கொட்டாரப்பட்டி வழியாக கணேசபுரம் வரை நபார்டு திட்டத்தில் ரூ.3.34 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணிகள், புதுச்சத்திரம் ஊராட்சிப் பகுதியில் ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் கட்டும் பணிகள், மாங்கரை ஆற்றில் வாய்க்கால் சீரமைப்பு பணிகள் ஆகியவற்றை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் திரு.பி.பொன்னையா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் திரு.பி.பொன்னையா, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் கனவு இல்லம், ஊரக குடியிருப்புகள் பழுது நீக்கம், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் விவரங்கள், அவற்றின் தற்போதைய நிலை ஆகியவற்றை கேட்டறிந்தார். பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, செயற்பொறியாளர் திரு.சக்திமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.