Close

Agri Grievance Day Petition

Publish Date : 12/11/2024

செ.வெ.எண்:-16/2024

நாள்:-11.11.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 15.11.2024 நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வளர்ச்சி மன்றக்கூடத்தில் 15.11.2024 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

அன்றைய கூட்டத்தில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள் அரசின் மானியத்திட்டங்கள், மானியத்தில் கிடைக்கும் வேளாண் கருவிகள், ஒழுங்குமுறை விற்பனைக்கூட நடவடிக்கைகள், கால்நடை பராமரிப்பு குறித்த தொழில்நுட்பங்கள், பட்டுப்புழு வளர்ப்பு மூலம் கூடுதல் வருமானம் பெற ஆலோசனைகள், முன்னோடி வங்கி மற்றும் கூட்டுறவு விவசாய கடன் சங்கங்களின் மூலமும் விவசாயிகளுக்கு கடன் சம்பந்தப்பட்ட விளக்கங்களும் வழங்கப்படவுள்ளது.

கூட்டத்தில் கலந்துகொள்ளும் அனைத்து விவசாயிகளுக்கும், விவசாயம் சார்ந்த கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்து தீர்வு கண்டு பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.