SCHOOL BOOKS – QUESTION BANK
செய்தி வெளியீடு எண் : 1999
நாள் : 20.11.2024
செய்தி வெளியீடு
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை தலைவராகக் கொண்டு பேராசிரியர் அன்பழகன் பள்ளிக்கல்வி இயக்கக வளாகத்தில் இயங்கும் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் சிறந்த பாடவல்லுநர்களைக் கொண்டு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பத்தாம் வகுப்பிற்கு 3 புத்தகமும், 12ஆம் வகுப்பிற்கு 8 புத்தகமும் ஆக மொத்தம் கீழ்க்கண்ட 11 புத்தகங்களை அச்சிட்டு தமிழகம் முழுவதும் மாவட்ட விற்பனை மையங்களில் (பள்ளிகள்) விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாங்கி பயன்பெறுவீர்.
1) 10ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் தொகுப்பு (தமிழ் மற்றும் ஆங்கில வழி) …ரூ.120/-
2) 10ஆம் வகுப்பு கணித தீர்வுப் புத்தகம் (ஆங்கில வழி) …ரூ.175/-
3) 10ஆம் வகுப்பு கணித தீர்வுப் புத்தகம் (தமிழ் வழி) …ரூ.175/-
4) 12ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் தொகுப்பு (அறிவியல் பாடப்பிரிவு) …ரூ.140/-
(தமிழ் மற்றும் ஆங்கில வழி)
5) 12ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் தொகுப்பு (கலைப் பாடப்பிரிவு) …ரூ.140/-
(தமிழ் மற்றும் ஆங்கில வழி)
6) 12ஆம் வகுப்பு கணித தீர்வுப் புத்தகம் (ஆங்கில வழி) …ரூ.160/-
7) 12ஆம் வகுப்பு கணித தீர்வுப் புத்தகம் (தமிழ் வழி) …ரூ.160/-
8) 12ஆம் வகுப்பு கணித COME புத்தகம் (ஆங்கில வழி) …ரூ.160/-
9) 12ஆம் வகுப்பு கணித COME புத்தகம் (தமிழ் வழி) …ரூ.160/-
10) 12ஆம் வகுப்பு இயற்பியல் தீர்வு புத்தகம் (ஆங்கில வழி) …ரூ. 70/-
11) 12ஆம் வகுப்பு இயற்பியல் தீர்வு புத்தகம் (தமிழ் வழி) …ரூ. 70/-
மாவட்ட விற்பனை மையம் (பள்ளிகள்)
1. திண்டுக்கல் அரசு ஆண்கள் மே.நி.பள்ளி, பழனி ரோடு, திண்டுக்கல்
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9