Sports Hostel Champions Kit
செ.வெ.எண்:-60/2024
நாள்:-25.11.2024
திண்டுக்கல் மாவட்டம்
மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகளுக்கு சாம்பியன்ஸ் கிட்- மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் மாணவிகள் விளையாட்டு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் தடகளம், கூடைப்பந்து மற்றும் கால்பந்து விளையாட்டில் மொத்தம் 65 மாணவிகள் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.
பயிற்சி பெற்று வரும் மாணவிகளுக்கு அரசு சார்பில் Smart Watch(ஸ்மார்ட் வாட்ச்) -1, Cap Lycra stretch (தொப்பி) – 1, Back Pack with Front Zip ( பை) – 1, Reusable First Aid Ice Bag (மீண்டும் பயன்படுத்தக் கூடிய முதலுதவி ஐஸ் பை), Insulated Water Bottle (காப்பிடப்பட்ட தண்ணீர் பாட்டில் ), Terry Towels, Face Towel and Hand Towel -4 Nos (துண்டுகள் 4 ) ஆகிய பொருட்கள் உள்ளடக்கிய சாம்பியன்ஸ் கிட் (Champions Kit ) தலைமையிடத்தில் இருந்து பெறப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் இன்று(25.11.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு விளையாட்டு விடுதி மாணவிகளுக்கு சாம்பியன்ஸ் கிட் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு. இரா. சிவா மற்றும் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.