Close

RRP, ALAGU Public hearing Postponed

Publish Date : 27/11/2024

செ.வெ.எண்:-71/2024

நாள்:-27.11.2024

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், பிலாத்து கிராமம், RRP குரூப்ஸ் மற்றும் எக்ஸ்போர்ட்ஸ், அழகு GG கிரானைட் அமைவதற்கான பொதுமக்கள் கருத்து கேட்கும் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், பிலாத்து கிராமம், 1. RRP குரூப்ஸ் மற்றும் எக்ஸ்போர்ட்ஸ், 2. அழகு GG கிரானைட் அமைவதற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது தொடர்பாக பொதுமக்களின் கருத்து கேட்டறிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 03.12.2024 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் பரமசிவம் தங்கம்மாள் திருமண மண்டபம், தெண்ணம்பட்டி கிராமம், வேடசந்தூர் – வடமதுரை சாலை, வேடசந்தூர் வட்டம், திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற இருந்த பொதுமக்கள் கருத்து கேட்கும் கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.