Close

Private Job Fair

Publish Date : 04/12/2024

செ.வெ.எண்:-02/2024

நாள்:-02.12.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 07.12.2024 அன்று திண்டுக்கல் எம்.வி.எம். அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 07.12.2024 அன்று (சனிக்கிழமை) காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை திண்டுக்கல் எம்.வி.எம். அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் நடத்தப்படவுள்ளது.

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணித் தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று வேலைநாடுநர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட எட்டாம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் பொறியியல் படித்த இளைஞர்கள் பங்கேற்று தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பினை பெறலாம். விருப்பமுள்ளவர்கள் கல்விச்சான்று, குடும்ப அட்டை, ஆதார்அட்டை, ஓட்டுநர் உரிமை அடையாள அட்டை, சுய விவரக் குறிப்பு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ நகலுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

மேலும், இம்முகாமில் மத்திய மற்றும் மாநில அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு இலவச திறன் எய்தும் பயிற்சிகளுக்கும் பதிவு செய்து கொள்ளலாம்.

எனவே படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் அதிக அளவில் கலந்துகொண்டு பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.