Postponement of Public Hearing
செ.வெ.எண்:-03/2024
நாள்:-02.12.2024
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மேற்கு வட்டம், கே.புதுக்கோட்டை கிராமத்தில் திருவாளர்கள் ஸ்ரீ தேவர் புளு மெட்டல் ரஃப் ஸ்டோன் மற்றும் கிராவல் குவாரி அமைவதற்கான பொதுமக்கள் கருத்து கேட்டுணரும் கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டம், கே.புதுக்கோட்டை கிராமம், திருவாளர்கள் ஸ்ரீ தேவர் புளு மெட்டல் ரஃப் ஸ்டோன் மற்றும் கிராவல் குவாரி, அமைவதற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது தொடர்பாக பொதுமக்களின் கருத்தினை கேட்டறிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 10.12.2024 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் “வி.ஆர்.எ.எண்.அண்ணாமலை செட்டியார் மண்டபம், ரெட்டியார்சத்திரம், திண்டுக்கல் மேற்கு வட்டம், திண்டுக்கல் மாவட்டம்“ என்ற மண்டபத்தில் நடைபெற இருந்த பொதுமக்கள் கருத்து கேட்டுணரும் கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.