Close

ITI-Gujiliamparai Admission

Publish Date : 11/12/2024

செ.வெ.எண்:-22/2024

நாள்:-09.12.2024

திண்டுக்கல் மாவட்டம்

குஜிலியம்பாறையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 2024-ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 2024-ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கைக்கு மாணவர்களின் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன. இணையதளத்தில் 09.12.2024 முதல் 31.12.2024 வரை நேரடி சேர்க்கை நடைபெறவுள்ளது.

தொழிற்பிரிவுகள், ஆண்டுகள், கல்வித்தகுதி விவரங்கள் வருமாறு:-

1. Textile Mechatronics (டெக்ஸ்டைல் மெக்கட்ரானிக்ஸ்) – 2 ஆண்டுகள் .

2. Electrician – Power Distribution – எலக்ட்ரீஷியன் – பவர் டிஸ்ட்ரிபூசன் – 2 ஆண்டுகள்.

3. In plant Logistics Assistant இன் பிளான்ட் லாஜிஸ்டிக்ஸ் அசிஸ்டண்ட் – ஓர் ஆண்டு.

4. Mechanic Diesel – மெக்கானிக் டீசல் – ஓர் ஆண்டு.

மேற்கண்ட அனைத்து தொழிற்பிரிவுகளுக்கான கல்வித்தகுதி 10-வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சேர்க்கை பெறும் மாணவ, மாணவிகளுக்கு, மாதந்தோறும் உதவித்தொகை ரூ.750, தமிழ்ப்புதல்வன், புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000, ஆண்கள் 14 முதல் 40 வயது வரை, மகளிருக்கு உச்சகட்ட வயது வரம்பு இல்லை, விலையில்லா மிதிவண்டி மற்றும் வரைபடக் கருவிகள், இலவச பேருந்து பயண அட்டை, மாநில அரசின் எஸ்சிவிடி(SCVT சான்றிதழ்), விலையில்லா சீருடை மற்றும் தையற்கூலி ஆண்டு தோறும், விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் காலணிகள் ஆகியவை வழங்கப்படும்.

மேலும், விவரங்களுக்கு, அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 9499055764 வாயிலாகவோ தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.