Close

DSO Dindigul – Second Saturday Special Camp

Publish Date : 14/12/2024

செ.வெ.எண்:-34/2024

நாள்:-12.12.2024

திண்டுக்கல் மாவட்டம்

அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர் (கு.பொ.) / வட்ட வழங்கல் அலுவலகங்களில் 14.12.2024 அன்று பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர் (கு.பொ.)/ வட்ட வழங்கல் அலுவலகங்களில் 14.12.2024(சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.

இந்த முகாம்களில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரி மனு அளிக்கலாம். மேலும், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் தொடர்பாக மனு அளிக்கலாம்.

எனவே, இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை தொடர்பான மனு அளித்து தீர்வு கண்டு பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.