Close

Electoral Roll Final Voter List – Publish

Publish Date : 09/01/2025
.

செ.வெ.எண்:-10/2025

நாள்: 06.01.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இறுதி வாக்காளர் பட்டியலினை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இறுதி வாக்காளர் பட்டியலினை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(06.01.2025) வெளியிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கத்திருத்தம்-2025- க்காக 29.10.2024 முதல் 28.11.2024 வரை பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இன்று(06.01.2025) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இறுதி வாக்காளர் பட்டியலின்படி திண்டுக்கல் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 9,29,706, பெண் வாக்காளர்கள் 9,85,625 மற்றும் இதர வகுப்பினர் 233 என மொத்தம் 19,15,564 வாக்காளர்கள் உள்ளனர்.

அதன்படி, 127-பழனி சட்டமன்ற தொகுதியில் 323 வாக்குச்சாவடிகள், 1,34,604 ஆண் வாக்காளர்கள், 1,41,454 பெண் வாக்காளர்கள், 63 இதரர்கள் என மொத்தம் 2,76,121 வாக்காளர்களும், 128-ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 282 வாக்குச்சாவடிகளும், 1,15,958 ஆண் வாக்காளர்கள், 1,24,876 பெண் வாக்காளர்கள், 7 இதரர்கள் என மொத்தம் 2,40,841 வாக்காளர்களும், 129-ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 322 வாக்குச்சாவடிகளும், 1,42,311 ஆண் வாக்காளர்கள், 1,54,020 பெண் வாக்காளர்கள், 24 இதரர்கள் என மொத்தம் 2,96,355 வாக்காளர்களும், 130-நிலக்கோட்டை (தனி) சட்டமன்ற தொகுதியில் 271 வாக்குச்சாவடிகளும், 1,22,395 ஆண் வாக்காளர்கள், 1,28,060 பெண் வாக்காளர்கள், 18 இதரர்கள் என மொத்தம் 2,50,473 வாக்காளர்கள், 131-நத்தம் சட்டமன்ற தொகுதியில் 327 வாக்குச்சாவடிகளும், 1,42,557 ஆண் வாக்காளர்கள், 1,49,875 பெண் வாக்காளர்கள், 75 இதரர்கள் என மொத்தம் 2,92,507 வாக்காளர்கள், 132-திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 290 வாக்குச்சாவடிகளும், 1,38,182 ஆண் வாக்காளர்கள், 1,46,884 பெண் வாக்காளர்கள், 43 இதரர்கள் என மொத்தம் 2,85,109 வாக்காளர்கள், 133-வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் 309 வாக்குச்சாவடிகளும், 1,33,699 ஆண் வாக்காளர்கள், 1,40,456 பெண் வாக்காளர்கள், 3 இதரர்கள் என மொத்தம் 2,74,158 வாக்காளர்கள் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 2,124 வாக்குச்சாவடிகளும், 9,29,706 ஆண் வாக்காளர்கள், 9,85,625 பெண் வாக்காளர்கள் 233 இதரர்கள் என மொத்தம் 19,15,564 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர்கள் தங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை சரிபார்த்துக்கொள்ளும் பொருட்டு இறுதி வாக்காளர் பட்டியல் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், பழனி சார் ஆட்சியர் திரு.சீ.கிஷன்குமார், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.கோட்டைக்குமார், வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், தேர்தல் வட்டாட்சியர் திரு.முத்துராமன், வட்டாட்சியர்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.