Close

RTO- Transport – Mini Bus – Notification

Publish Date : 05/02/2025

செ.வெ.எண்:-05/2025

நாள்:- 05.02.2025

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

அரசாணை நிலை எண்: 33, உள் (போக்குவரத்து-I) நாள்:23.01.2025-ல் அறிவிக்கப்பட்டுள்ள புதிய விரிவான திட்டம்-2024-ன்படி, சிற்றுந்து உள்ளிட்ட நிலைப் பேருந்துகளை ஒழுங்குப்படுத்திடவும், புதிய சிற்றுந்து வாகன அனுமதிச்சீட்டுகள் வழங்கிடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. சிற்றுந்துகளுக்கான புதிய வழித்தடங்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி அவர்களால் தெரிவு செய்திடப்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நகர்புற மற்றும் கிராமப்புற பேருந்து சேவைகளை மேம்படுத்துவதும், 100 மற்றும் அதற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும், கிராமங்கள் மற்றும் வசிப்பிடங்களுக்கு, கடைசி எல்லை இணைப்பை உறுதி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

வழித்தடங்கள் மாவட்ட போக்குவரத்து அதிகாரியினால் அடையாளம் காணப்படும். வழித்தடத்தின் நீளம், அதிகபட்சம் 25 கி.மீ. வரை இருக்க வேண்டும். வழித்தடத்தின் மொத்த நீளத்தில் 65% நீளம் பஸ் போக்குவரத்து இல்லாத வழித்தடமாக இருக்க வேண்டும். நிலைப்பேருந்து மற்றும் சிற்றுந்து சேவைகள் இல்லாத வழித்தடங்கள் மற்றும் மேற்படி சேவைகள் இருந்தும் அவை ஒருநாளில் 4 (நான்கு) நடைகளுக்கும் குறைவாக இயக்கப்படுமாயின், அவை பேருந்து சேவைகள் இல்லா வழித்தடமாகக் கருதப்படும். என வட்டார போக்குவரத்து அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.