Close

Collector Inspection – Agriculture – Horticultor – Authoor Block

Publish Date : 17/02/2025
.

செ.வெ.எண்:-34/2025

நாள்:-16.02.2025

திண்டுக்கல் மாவட்டம்

ஆத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், செய்தியாளர்களுடன் சென்று நேரில் பார்வையிட்டு, திட்டங்களின் பயன்கள் குறித்து பயனாளிகளிடம் கேட்டறிந்தார்.

ஆத்தூர் வட்டாரத்தில் தேசிய தோட்டக்கலை இயக்க த்திட்டத்தின் மூலம், பசுமைக்குடில், சிப்பம் கட்டும் அறை, வெங்காய சேமிப்பு கிடங்கு, பண்ணைக்குட்டை அமைத்தல், மண் புழு உரக்கூடம் அமைத்தல், பயிர் பரப்பு அதிகரிப்பு போன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்காக மொத்தம் 304 பயனாளிகளுக்கு மானியத் தொகையாக மொத்தம் ரூ.1.16 கோடி வழங்கப்பட்டுள்ளது. தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் நிரந்தர கல்தூண் பந்தல் அமைத்தில், பயிர் பரப்பு அதிகரிப்பு(முருங்கை) போன்ற திட்டங்களுக்காக மொத்தம் 95 பயனாளிகளுக்கு மானியத் தொகையாக மொத்தம் ரூ.1.48 கோடி வழங்கப்பட்டுள்ளது. நுண்ணீர்ப்பாசன திட்டத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க மொத்தம் 215 பயனாளிகளுக்கு மானியத் தொகையாக மொத்தம் ரூ.1.19 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட திட்டங்கள் மூலம் ஆக மொத்தம் 614 பயனாளிகளுக்கு மானியத் தொகை ரூ.3.84 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் நுண் நீர் பாசனம் திட்டத்தில் ரூ.48,750 மானியத்தில் எஸ்.பாறைப்பட்டி ஊராட்சி, வண்ணம்பட்டியில் திரு.ராதாகிருஷ்ணன் என்பவர் வாழை தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சொட்டுநீர் பாசனம், தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் ரூ.50,000 (1000 சதுர அடிக்கு) மானியத்தில் பாறைப்பட்டி கிராமத்தில் விவசாயி திரு.தியாகராஜன் என்பவர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மண்புழு உர அலகு, சீவல்சரகு ஊராட்சியில் விவசாயி திரு.பாஸ்கரன் என்பவருடைய நெல் விதைப்பண்ணை, தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் ரூ.18,75,000 மானியத்தில் ஆத்துார் ஊராட்சியில் திரு.நரசிங்கமூர்த்தி என்பவரின் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் நிலை செயல்விளக்கத் திடல், இயற்கை முறை முருங்கை விவசாயம், ஆத்துாரில் நெல் விதைப்பண்ணை, இயற்கை முறையில் நெல் நடவு, நெல் கொள்முதல் பணிகள், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் (CMMKMKS) ஒரு கிளஸ்டருக்கு ரூ.1,00,000 என்ற விகிதத்தில் கரிம உள்ளீட்டு உற்பத்தி அலகு நிறுவுதல், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில்(KAVIADP) சித்தரேவு கிராமத்தில் தரிசு நில மேம்பாட்டு செயல்பாடுகள், தேசிய தோட்டக்கலை மிஷன் – பாலிஹவுஸ் திட்டத்தில் ரு.16,88,000(4000 சதுர மீட்டர்) மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள மகேஷ் பாலிஹவுஸ், ரூ.4,67,500(1000 சதுர மீட்டர்) மானியத்தில் அமைக்கப்பட்ட கிஷோக் பாலிஹவுஸ், பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் விவசாய நிலங்களில் மண் வரப்பு கட்டுதல் பணிகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, திட்டங்களின் பயன்கள் குறித்து பயனாளிகளிடம் கேட்டறிந்தார்.

.

.

இத்திட்டங்களின் கீழ் பயனடைந்துள்ள பிள்ளையார்நத்தம் ஊராட்சியை சேர்ந்த திருமதி விஜயா என்பவர் தெரிவித்ததாவது:-

எங்களுக்கு சொந்தமாக தென்னந்தோப்பு உள்ளது. இப்போதைய காலத்தில் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பது சிரமம்தான். அப்படியே கிடைத்தாலும் வேலையாட்களுக்கு கூலி கொடுத்து கட்டுபடியாகாத நிலைதான் உள்ளது. விவசாய தொழில் உள்ள சிரமங்களை தவிர்க்க தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் எங்ளைப்போன்ற ஏழை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எங்கள் தோட்டத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பயனாளிகளைக் கொண்டு மண் வரப்பு கட்டுதல், புல் செதுக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது எங்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. ஏழை விவசாயிகளின் நலன் கருதி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன், என தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, தோட்டக்கலை உதவி இயக்குநர் திரு.டி.எஸ்.பி.அலெக்ஸாண்டர், வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி ராஜேஸ்வரி, துறை அலுவலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.