Close

PMKISAN FARMER REGISTRY – CAMP

Publish Date : 24/06/2025

செ.வெ.எண்:-82/2025

நாள்:-23.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

வேளாண் அடுக்ககம் மூலம் தனித்துவ விவசாய அடையாள அட்டை எண் பெறுவதற்கான சிறப்பு முகாமில் விவசாயிகள் தங்களது நில உடைமை விபரங்களை பதிவு செய்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழகத்தில் வேளாண் அடுக்ககம் மூலம் தனித்துவ விவசாய அடையாள அட்டை எண் வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இதனை துரிதப்படுத்தி விவசாயிகள் தங்களது நில விவரங்களை இணைத்திட ஏதுவாக சிறப்பு முகாம்கள் அனைத்து வட்டாரங்களிலும் நடத்தப்பட உள்ளது.

விவசாயிகள் தங்களது நில உடைமை விபரங்களை பதிவு செய்வதன் மூலம் (Farmer Registry) விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் எதிர்வரும் காலங்களில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் விற்பனைத்துறை மூலமாக செயல்படுத்தப்படும் பல்வேறு மானியத் திட்டங்களுக்கு அடிப்படையாக இந்த அடையாள எண் இருக்கும்.

ஏற்கெனவே, ஒரு வட்டாரத்தில் தங்களுக்கு சொந்தமான நிலங்களுக்கான அடையாள அட்டை பெற்றிருந்தாலும் இதர வட்டாரங்களில் தங்களுக்கு சொந்தமான நிலங்களை இணைத்தால்தான் அடையாள அட்டை பெறுவதற்கு முழு தகுதியானவர்களாக கருதப்படுவார்.

எனவே, அனைத்து வட்டாரங்களிலும் உள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண் துறை அலுவலர்கள், தோட்டக்கலை துறை அலுவலர்கள் மற்றும் வேளாண் விற்பனை துறை அலுவலர்களை உடனடியாக அணுகி சிறப்பு முகாம்களில் தங்களின் நில விபரங்களை பதிவு மேற்கொண்டு பயன்பெறலாம்.

மேலும், PMKISAN திட்டத்தின் கீழ் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 பெற்று வரக்கூடிய விவசாயிகள், இத்திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற கட்டாயமாக தனித்துவ விவசாய அடையாள அட்டை எண் பெற்றிருக்க வேண்டும். எனவே, PMKISAN திட்ட பயனாளிகள் உடனடியாக தங்களின் நில உடைமை விபரங்களை வேளாண்மை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு பதிவு மேற்கொண்டு, பயன்பெறலாம், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.