Food Safety – Notification
செ.வெ.எண்:-88/2025
நாள்:-24.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு துறையின் கீழ் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெற இணையதளம் வாயிலாக விண்ணபிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
அனைத்து உணவு வணிகர்களுக்கும் உணவு பாதுகாப்பு துறையின் கீழ் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் அவசியம். இதனை https:// foscos.fssai.govi.in, என்ற இணைய தளம் மூலம் விண்ணபித்து பெற்றுக் கொள்ளலாம்.
உணவுப் பொருட்களை கையாளுபவர்கள் தன் சுத்தம் பேண வேண்டும், கையுறை, தலைக்கவசம் மற்றும் மேலங்கி அணிந்திருக்க வேண்டும். மேலும் மருத்துவச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
உணவுப் பொருட்கள் தயாரிப்பவர்கள் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடாது, உணவு பொருட்களில் செயற்கை நிறங்களை சேர்க்கக் கூடாது. சமைக்கும் மற்றும் பரிமாறும் இடங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமாரிக்கப்பட வேண்டும் மற்றும் கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்.
சமைத்த உணவுகளை வாழை இலை மற்றும் மந்தார இலையில் பரிமாற வேண்டும். அனுமதிக்கப்பட்ட சில்வர் பாயில் மற்றும் டப்பாக்களில் மட்டுமே உணவு பொருட்களை பார்சல் செய்ய வேண்டும், வடை, பஜ்ஜி, போண்டா போன்ற பலகாரங்களை செய்தித் தாள்களில் பொட்டமிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை அங்கீகரிக்கப்பட்ட RUCO நிறுவனத்திற்கு Bio Desel தயாரிக்க வழங்க வேண்டும். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய கூடாது.
மீறினால் முதல் முறை விற்பனை செய்பவர்களுக்கு ரூ.25,000 அபராதமும், 15 நாட்கள் கடை மூடப்படும், இரண்டாவது முறை விற்பனை செய்பவர்களுக்கு ரூ.50,000 அபராதமும், 30 நாட்கள் கடை மூடப்படும், மூன்றாம் முறை விற்பனை செய்பவர்களுக்கு ரூ.1,00,000 அபராதமும், 3 மாதம் கடை மூடப்படும், மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.