Close

Sports-Badhma Award

Publish Date : 26/06/2025

செ.வெ.எண்:-96/2025

நாள்:-25.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

விளையாட்டுத்துறையில் தலைசிறந்த, சாதனை புரிந்தவர்கள் “பத்ம விருது“ பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

இந்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான “பத்ம விருது” என்ற பெயரில் பத்ம விபூசன், பத்ம பூசன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் மூன்று விருதுகள் வழங்கி வருகிறது. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தலைசிறந்த, சாதனை புரிந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. அதில் விளையாட்டுத்துறை சார்பாக பத்ம விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி, 2026-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இவ்விருதிற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் இதர முக்கிய விவரங்களை https://awards.gov.in மற்றும் https://padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30.06.2025 ஆகும்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் மற்றும் உரிய ஆவணங்களை (3 எண்ணம்) ‘மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல்- 624004“ என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் 0451-2461162 வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர், திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.