Close

The Hon’ble Food and Civil Supply Minister – (Palani Murugan kovil )

Publish Date : 01/07/2025
.

செ.வெ.எண்:-112/2025

நாள்:-29.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், பக்தர்களுக்கு நாள்தோறும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை இன்று(29.06.2025) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல்படுத்தி வருகிறார்கள்.

பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களுக்கு உணவு வழங்கும் விதமாக திருக்கோயில் மூலம் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது ஏற்கனவே இத்திருக்கோயில் மூலம் ஓராண்டிற்கு 20 இலட்சம் பக்தர்கள் பயனடைந்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பிரசித்திப்பெற்ற பிரார்த்தனை தலம் என்பதாலும், பக்தர்கள் அதிகளவில் வருகை புரிவதாலும், பக்தர்களின் நலன் கருதி. திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கிட முடிவு செய்யப்பட்டு 2025-2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் வரவு செலவு கூட்டத் தொடரில் இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களால் ”திருக்கோயில்களுக்கு வருகை புரியும் பக்தர்கள் அனைவருக்கும் நாள் முழுவதும் பிரசாதம் தற்போது 25 திருக்கோயில்களில் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் இந்த ஆண்டு மேலும் 5 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும்” என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு, இத்திருக்கோயிலின் மலைக்கோயில் வெளிப்பிரகார திருக்கல்யாண மண்டபத்தில் நாள்தோறும் பிரசாதம் வழங்க உத்தேசிக்கப்பட்டு நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி முடிய சாதாரண நாட்களில் 6,000 பக்தர்களும், விஷேச நாட்களில் 10,000 பக்தர்களும் பயன்பெறும் வகையில் வெண்பொங்கல் + காய்கறி கூட்டு அல்லது சாம்பார் சாதம் + காய்கறி கூட்டு அல்லது தக்காளி சாதம் + காய்கறி கூட்டு அல்லது லெமன் சாதம் + காய்கறி கூட்டு அல்லது தயிர்சாதம் + காய்கறி கூட்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று நாள்தோறும் பாக்கு மட்டையிலான தட்டில் வைத்து பிரசாதமாக வழங்கும் திட்டம் ஆண்டு ஒன்றுக்கு சுமார் ரூபாய் 4.00 கோடி செலவில் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 25 இலட்சம் பக்தர்கள் பயனடைவார்கள் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், அருள்மிகு தண்டாயுதபாணி சுாவமி திருக்கோயில் இணை ஆணையர் திரு.செ.மாரிமுத்து, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுாவமி திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் திரு.சுப்பிரமணியன், திருக்கோயில் பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.