DADWO- Vacancy
செ.வெ.எண்:-15/2025
நாள்:-04.07.2025
திண்டுக்கல் மாவட்டம்
பெருமாள்கோவில்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் காலியாக உள்ள ஒரு பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும், பெருமாள்கோவில்பட்டி, அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் காலியாக உள்ள ஒரு பணி பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேற்படி தற்காலிக தொகுப்பூதிய பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழு வாயிலாக தலைமையாசிரியர் மற்றும் மூத்த பட்டதாரி. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் ஆகியோரைக் கொண்ட குழு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் வசிப்பவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
தற்காலிக பணியிடத்தில் பணிபுரிய விருப்பமுள்ள நபர்கள் உரிய கல்விச்சான்றுகளுடன் விண்ணப்பங்களை திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ 10.07.2025-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.