Collector inspection-Ponnimanthurai
செ.வெ.எண்:-39/2025
நாள்:-09.07.2025
திண்டுக்கல் மாவட்டம்
பொன்னிமாந்துரை புதுப்பட்டியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் மற்றும் திண்டுக்கல் கமலாநேரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், பொன்னிமாந்துரை புதுப்பட்டியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் மற்றும் திண்டுக்கல் கமலாநேரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாநகராட்சி பொன்னிமாந்துரை புதுப்பட்டியில் தமிழ்நாடு கிளைமேட் ரெசிடென்ஸ் அர்பன் டெவலப்மென்ட் புரோகிராம்(TNCRUDP) ரூ.36.55 கோடி மதிப்பீட்டில் 14.60 எம்.எல்.டி கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் புதியதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் கமலாநேரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை, மருந்துகள் இருப்பு விவரங்கள், சிகிச்சை முறைகள், மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் மற்றும் புதிதாக ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டடம் கட்டுமான பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் திரு.ம.செந்தில்முருகன், நகர்நல அலுவலர் திரு.ராம்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.