Close

ICDS Motherfeeding Awareness Rally

Publish Date : 04/08/2025
.

செ.வெ.எண்:- 01/2025

நாள்:-01.08.2025

திண்டுக்கல் மாவட்டம்

தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் துறை சார்பில் தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இன்று(01.08.2025) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்ட் 01-ஆம் தேதி முதல் 07-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப்பணிகள் துறையின் சார்பில் மாவட்ட அளவில் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெ்றறது.

இவ்விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்திலிருந்து தொடங்கி திண்டுக்கல் பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. அங்கன்வாடி பணியாளர்கள் 150 நபர்கள் மற்றும் அமைதி அறக்கட்டளை நிறுவனர்கள் பேரணியில் கலந்துகொண்டனர். பேரணியில் கலந்துகொண்டவர்கள், “தாய்ப்பால் குழந்தைக்கு முதல் தடுப்பூசி, தாயின் அன்பும் ஆரோக்கியமும் தாய்ப்பாலில்!, தாய்ப்பால் குழந்தையின் உயிர் நீர்!, தாய்ப்பால் பாலல்ல வாழ்வின் பலம்!“¬ என்பது போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர்(பொ) திருமதி பெ.விஜயராணி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப்பணிகள் திட்ட அலுவலர்(பொ) திருமதி மா.அமுதகலா, திண்டுக்கல் மற்றும் பழனி தாய் சேய் நல அலுவலர்கள், திண்டுக்கல் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்துக் கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.