The Hon’ble DCM VC-Rural Development minister-Mass Anti Drug Pledge Campaign
செ.வெ.எண்:-43/2025
நாள்: 11.08.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், ”போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு” நிகழ்ச்சியின் ஒருபகுதியாக மாநிலம் தழுவிய ”பெருந்திரள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தல்” நிகழ்வினை சென்னையில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ. பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பெருந்திரள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு” நிகழ்ச்சியின் ஒருபகுதியாக மாநிலம் தழுவிய ”பெருந்திரள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தல்” நிகழ்வினை சென்னையில் இருந்து காணொளிக் காட்சி (Video Conferencing) வாயிலாக இன்று(11.08.2025) தொடங்கி வைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ. பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் முத்தனம்பட்டி பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பெருந்திரள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி (Mass Anti Drug Pledge Campaign) எடுத்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ. பெரியசாமி அவர்கள் தலைமையில் அனைவரும் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதன்படி, “போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும், எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.
போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன்“ என அனைவரும் உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.
“போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு“ என்ற நிலையை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மற்றும் கல்லுாரி அளவில் செயல்படும் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள், போதைப்பொருள் எதிர்ப்பு தன்னார்வக் குழுக்கள் ஆகியவற்றில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட குழுக்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ. பெரியசாமி அவர்கள் வழங்கினார்.v
இந்நிகழ்ச்சியில், வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., உதவி ஆட்சியர்(பயிற்சி) மரு.ச.வினோதினி பார்த்திபன், இ.ஆ.ப., திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி ப.உஷா, கல்லுாரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.