DRDA-Tour
செ.வெ.எண்:-45/2025
நாள்:-11.08.2025
திண்டுக்கல் மாவட்டம்
மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் கிராம ஊராட்சி செயலர்கள் உட்பட 50 நபர்கள் விருதுநகர், தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு செல்லும் பட்டறிவு பயணத்தை
மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் கிராம ஊராட்சி செயலர்கள் உட்பட 50 நபர்கள் விருதுநகர், தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு செல்லும் பட்டறிவு பயணத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(11.08.2025) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாது:-
திண்டுக்கல் மாவட்டம், மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் இயங்கி வரும் மறுசீரமைக்கப்பட்ட இராஷ்ரீய கிராம் சுவராஜ் அபியான் (RRGSA) 2025-26 திட்டத்தின் கீழ், பிற மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் கிராம ஊராட்சி செயலர்கள் உட்பட 50 நபர்கள் 11.08.2025, 12.08.2025 மற்றும் 13.08.2025 ஆகிய தேதிகளில் விருதுநகர், தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களில் பட்டறிவு பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்தக் குழுவினர், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கட்டங்குடி ஊராட்சி, ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றியம், திருண்ணாமலை, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், குண்ணுார் மற்றும் கோவிந்தநல்லுார், தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் குணராமநல்லுார், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், கடங்கனேரி மற்றும் மாயமான்குறிச்சி, குருவிக்குளம் ஊராட்சி ஒன்றியம், விரகனுார், திருநெல்வேலி மாவட்டம், மானுார் ஊராட்சி ஒன்றியம், மாதவன்குறிச்சி, பாப்பாகுடி ஊராட்சி ஒன்றியம் திருப்புடைமருதுார், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், நொச்சிக்குளம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் போதுமான நீர் வசதியுள்ள கிராமம், உள்கட்டமைப்பு போதுமான கிராமம், சுத்தமான மற்றும் பசுமையான கிராமம், பெண்களுக்கு உகந்த பஞ்சாயத்து போன்ற நடவடிக்கைகளை பார்வையிடவுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளை வளர்ச்சியடைய உதவும் வகையில் இந்த பட்டறிவுப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, மாவட்ட ஊராட்சி செயலாளர் திரு.வி.ஜெயச்சந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.