Close

Sports Dept

Publish Date : 09/09/2025
.

செ.வெ.எண்:-27/2025

நாள்:-08.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு கால்பந்து கழக அணியினர் கேரளா மாநில பாலக்காடு சீனியர் பிரிவு போட்டிக்கு செல்வதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழ்நாடு கால்பந்து கழகம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பாக 30-வது தேசிய மகளிர் கால்பந்து போட்டிகளில் பங்குபெறும் அணியினை மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழியனுப்பும் விழா 30 ஆவது தேசிய மகளிர் கால்பந்து போட்டிகளில் பங்குபெறும் தமிழக அணிக்கான போட்டித் தேர்வு கடந்த மாதம் 28.08.2025 முதல் 29.08.2025 பார்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. போட்டியில் தமிழக முழுவதும் 13 வீராங்கனைகள் பங்கு பெற்றார்கள் போட்டியிலிருந்து 36 வீராங்கனைகள் தேர்வு செய்து பயிற்சி முகாம் நடத்தி அதில் 20 வீராங்கனைகள் பாலக்காட்டில் நடைபெறுகின்ற தேசிய கால்பந்து போட்டியில் பங்கு பெற 08.09.2025 மாலை ரயில் நிலையத்திலிருந்து செல்ல இருக்கிறார்கள் அவர்களை பாராட்டி வழியனுப்பும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் R. ரமேஷ் பட்டேல் செயலாளர் Rtn. MPHF. S. சண்முகம் தமிழ்நாடு விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர் ஆர் சிவா தமிழ்நாடு கால்பந்து கழக குழு ஒருங்கிணைப்பாளர் பசி அஹமது பார்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்மன் என் ஸ்ரீதர் துணைச் செயலாளர் பயிற்சியாளர்கள் கலா சுமித்ரா ஆகியோர் கலந்துகொண்டு அவர்களுக்கு சீருடை வழங்கி வாழ்த்தி வழி அனுப்பும் நிகழ்வு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது நமது தமிழக அணி கடந்த 2018 மற்றும் 2023 தேசிய அளவில் முதலிடம் பெற்றவர்களும் 2019 2020 நடைபெற்ற போட்டிகளில் இரண்டாம் இடம் மூன்றாம் இடம் பெற்றார்கள் இறுதியாக 2023 நடைபெற்ற போட்டியில் முதலிடம் பெற்று அணிக்கு தமிழக அரசு வழங்கக்கூடிய 3% விளையாட்டு இட ஒதுக்கீட்டில் நமது வீராங்கனைகள் சுமார் 10 பேர் பல்வேறு மாவட்டங்களில் அரசு பணியில் பணிபுரிந்து வருகிறார்கள் அதே போல் இந்த அணி சென்று வெற்றி பெறும் வீராங்கனைகளுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் மேலும் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தை மேம்படுத்தும் ஆட்சியரின் முயற்சிக்கு சிஎஸ்ஆர் நிதி வழங்கும் திட்டத்திற்காக சண்முகம் மற்றும் ரமேஷ் பட்டேல் ஆகியோர் நிதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., உதவி ஆட்சியர்(பயிற்சி) மரு.ச.வினோதினி பார்த்திபன், இ.ஆ.ப., துணை ஆட்சியர் (பயிற்சி) திருமதி.ராஜேஸ்வரி சுவி உட்பட பலர் உள்ளனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.