Close

Tourism Award

Publish Date : 11/09/2025

செ.வெ.எண்:-33/2025

நாள்:-10.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தொழில் முனைவோர்களும் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்

உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலாத் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மூலமாக தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுகள் வழங்கும் விழா வருகின்ற 27.09.2025 உலக சுற்றுலா தினத்தன்று நான்காவது ஆண்டாக மொத்தம் 45 விருதுகள் உள்ளடக்கிய 17 பிரிவுகளில் பல்வேறு சுற்றுலா பயண நிறுவனங்கள், விமான நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் மாநிலத்தில் சுற்றுலா மேம்பாட்டிற்காக சிறப்பாகவும் தனித்துவமாகவும் பங்களிக்கும் பிற சுற்றுலா நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தொழில் முனைவோர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள். 15.09.2025. தொடர்புக்கு 04542241675, 9176995867, விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.