Collector Inspection – Natham Panchayat Union
செ.வெ.எண்:- 36/2025
நாள்: 10.09.2025
திண்டுக்கல் மாவட்டம்
நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஊராட்சி ஒன்றியம், செல்லப்ப நாயக்கன்பட்டி, ஊராளிப்பட்டி, சமுத்திரப்பட்டி, பூதக்குடி, சிறுகுடி, புதுப்பட்டி, வெல்லம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (10.09.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் நடைபெற்று வரும் வளமிகு வட்டார வளர்ச்சி ஆயத்த ஆடை உற்பத்தி தயாரிப்பு நிலையத்தை பார்வையிட்டதுடன், 20 பவர் தையல் இயந்திரம், 30 சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து ஆயத்த ஆடை உற்பத்தி பயிற்சி வழங்கப்பட்டு வருவதை பார்வையிட்டார். தொடர்ந்து கிராம செழுமை மீட்பு திட்டத்தின் கீழ் பயிற்சி நடைபெற்று வருவதை பார்வையிட்டார்கள். ஒரு ஊராட்சிக்கு 3 பணியாளர்கள் வீதம் 13 ஊராட்சிகளில் 39 பணியாளர்கள் இந்த பயிற்சியில் கலந்துகொண்டனர். மேலும் பாலின வளம் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், நத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் மையத்தை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து, வேலம்பட்டி ஊராட்சி, மோதிக்குளத்தில் மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.5.85 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குளம் சீரமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து. நத்தம் ஊராட்சி ஒன்றியம், வேலம்பட்டி செல்லம் புதூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.4.85 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குளம் சீரமைக்கும் பணி, புதுப்பட்டியில் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலைய கட்டடம் பணி மற்றும் சமுத்திரப்பட்டியில் பூலான்மலை முதல் அங்கையற்கண்ணி ஊரணி வரை ரூ.22.00 மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலைப்பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, பூதக்குடி ஊராட்சி, சடையம்பட்டியில் ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நர்சரி கார்டனை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து சிறுகுடி ஊராட்சி, பூசாரிப்பட்டியில் ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மயான எரிமேடை அமைக்கும் பணிகள், குடிநீர் வசதி மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் பூதக்குடி ஊராட்சி, சடையம்பட்டியில் ரூ.9.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வண்ணக்கல் பதிக்கும் பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து, நத்தம் ஊராளிப்பட்டியில் ரூ.16.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வேளாண்மை விற்பனை சேமிப்பு கிடங்கு கட்டுமான பணிகளையும், மேலும், ஊராளிப்பட்டி ஊராட்சியில் தொடக்கப்பள்ளியில் ரூ.1.26 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பள்ளி கழிப்பறைகள் மராமத்து பணிகளை பார்வையிட்டார். மேலும் ஊராளிப்பட்டியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கலைஞர் கனவு இல்லம் கட்டடத்தை பார்வையிட்டார். இதுவரை நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்லம் 2025-26-ல் 259 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. கலைஞர் கனவு இல்லம் 2024-25-ல் 184 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. செல்லப்ப நாயக்கன்பட்டி ஊராட்சி, மூங்கில்பட்டியில் ரூ.36.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடங்களை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது நத்தம் வட்டாட்சியர் திரு.ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ரவீந்திரன் மற்றும் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.