The Hon’ble Rural Development minister- Ungaludan Stalin – Reddiyar chathiram
செ.வெ.எண்:-47/2025
நாள்: 12.09.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், மாங்கரை ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், நடுப்பட்டியில் ரூ.9.91 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக்கடையை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், மாங்கரை ஊராட்சியில் இன்று (12.09.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், நடுப்பட்டியில் ரூ.9.91 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக்கடையை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, அந்தத் திட்டங்களின் பயன்கள் கடைக்கோடி கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்துள்ளார்கள். அந்த வகையில் அரசு அலுவலர்கள் நேரடியாக மக்களிடம் சென்று அவர்களின் கோரிக்கைகளை பெற்று உடனடியாக தீர்வு காண வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.
“உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமிற்கு வந்துள்ள பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுக்க வேண்டும். குறிப்பாக இம்முகாமில் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை, ஆதார் கார்டு, இலவச வீட்டுமனை பட்டா, சாலை வசதி, தெரு விளக்கு வசதி, குளத்தை தூர்வாரும் பணிகள், வாய்க்கால் உருவாக்குதல் ஆகியவற்றை பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவசாயிகளும் தங்களுக்குத் தேவையான கோரிக்கைகளை இம்முகாமில் மனுக்களாக கொடுத்து பயன்பெறலாம்.
இன்றைய தினம் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் 30 மனுக்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை ரெட்டியார்சத்திரம் தொகுதியில் 8000 நபர்களின் மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் சுமார் 1 கோடியே 14 இலட்சம் பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கி உள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நீங்கள் கொடுக்கும் அனைத்து மனுக்களுக்கும் கட்டாயமாக விரைவில் தீர்வளிப்பார் என தெரிவித்தார்.
பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் இடங்களுக்கு பட்டா வேண்டி அலையாமல் கோரிக்கைகளாக பதிவு செய்யுங்கள், அந்தப்பகுதி வட்டாட்சியர் அவர்களிடம் தெரிவித்து எளிமையான முறையில் இலவச வீட்டுமனை பட்டா விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்து தரப்படும். அந்த வகையில் இதுவரை தமிழ்நாடு முழுவதும் 24 இலட்சம் பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகளும் கட்டித்தரப்படுகின்றது என தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 10,000 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் கட்டப்பட்டு வருகிறது. அதில் ஆத்தூர் வட்டத்தில் 3000 கலைஞர் கனவு இல்லம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் என்னிடம் 200 பேர் கோரிக்கை மனுக்கள் கொடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கைகளும் விரைவில் பரிசீலனை செய்யப்பட்டு தீர்வு காணப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். பொதுமக்கள் வசிப்பதற்கு முக்கியமாக காற்றோட்டமான இடம் வசதி, வெளிச்சம், குடிநீர் வசதி, சாலை வசதி ஆகியவை தேவை. அதனையும் உள்ளடக்கிய வகையில் நம்முடைய அரசு செய்து வருகிறது. மேலும் இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் மாவட்டம் நம்முடைய திண்டுக்கல் மாவட்டம் என்பதை நான் பெருமையுடன் கூறுகிறேன் என தெரிவித்தார்.
எல்லாருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கமாகும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசின் திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும், கட்சி, இனம், மதம் பாகுபாடு இன்றி எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல்படுத்தி வருகிறார். இந்தியவிலே தலைசிறந்த மாநிலம் தமிழகம், இந்தியாவிலே தலைசிறந்த முதலமைச்சர் நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்.
இன்றைய தினம் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் 10 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் வழங்கினார்.
முன்னதாக ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், நடுப்பட்டியில் மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் ரூ.9.91 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக்கடையை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.ஜெயபிரகாஷ், ரெட்டியார்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.கண்ணன், திரு.மலரவன், பொதுவிநியோகத்திட்டம் சார்பதிவாளர் திரு.ச.அன்பரசு, களஅலுவலர் திரு.மணிகண்டன், செயலாளர் திருமதி டி.கலையரசி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.