Monitoring Officer Inspection and Meeting
செ.வெ.எண்:-46/2025
நாள்:12.09.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்திக்கழகம் நிருவாக இயக்குநர் மரு.எஸ்.அனீஸ் சேகர், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்திக்கழகம் நிருவாக இயக்குநர் மரு.எஸ்.அனீஸ் சேகர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் அனைத்து துறை உயர்மட்ட அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று(12.09.2025) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். அரசு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டப் பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், முடிவுற்ற திட்டப்பணிகள் மற்றும் நடைபெற்று வரும் திட்டப்பணிகளின் நிலைகளை கேட்டறிந்தார்.
முன்னதாக, ஜம்புதுரைக்கோட்டை கிராமத்தில் 45 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழக்குவது குறித்து ஆய்வு செய்தார். மல்லணம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவத்திற்குப் பிறகு PICME போர்ட்டலில் நிகழ்நேர உள்ளீடு செய்யப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, வத்தலக்குண்டு அன்னை வேளாங்கண்ணி உயர்நிலைப்பள்ளியில் நாளை நடைபெறவுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், வத்தலக்குண்டு பேரூராட்சி பெத்தானியாபுரம் நகர்ப்புறங்களில் வீடுகள் கட்டி பட்டா இல்லாத 103 பயனாளிகளுக்கு பட்டா வழங்க மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம் நிருவாக இயக்குநர் மருத்துவர் மரு.அனீஸ் சேகர், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம் நிருவாக இயக்குநர் மருத்துவர் மரு.அனீஸ் சேகர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு துறைகளில் ஒவ்வொரு நாளும் பல்வேறு திட்டங்களை கிராம மக்களுக்காக வழங்கி கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் பொதுமக்களின் இருப்பிடத்திற்கே சென்று குறைகளை தீர்க்கும் வண்ணம் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டம் சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.15.07.2025 அன்று தொடங்கப்பட்ட இந்த திட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து முகாம்களுக்கும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் நேரடியாக சென்று மனுக்களை பெற்று அந்த மனுக்களை உடனடியாக தீர்வு காணுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த 45 நாட்களில் சுமார் 1 இலட்சம் மனுக்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் பெறப்பட்டு, 15 ஆயிரம் மனுக்களின் மீது தீர்வு காணப்பட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது. மேலும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேரடியாக ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் இம்முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு சரியாக கையாளப்படுகிறதா, உரிய நேரத்தில் தீர்வு காணப்படுகிறதா என்பதை காணொலி காட்சி வாயிலாக ஆய்வு கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இதுவரை கடந்த 45 நாட்களில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 3 ஆய்வுக்கூட்டமும், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் 1 ஆய்வுக்கூட்டமும் நடத்தி உள்ளார்கள். பெறப்படும் மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளதா என்பதை கண்காணிப்பதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அலுவலர்களை நியமித்துள்ளார்கள். அந்த வகையில் இன்றைய தினம் அரசின் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்திக்கழகம் நிருவாக இயக்குநர் மரு.எஸ்.அனீஸ் சேகர், இ.ஆ.ப., அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்துள்ளார்கள். எனவே, பொதுமக்கள் இம்முகாமினை சிறந்த முறையில் பயன்படுத்திகொள்ள வேண்டும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம் நிருவாக இயக்குநர் மருத்துவர் மரு.அனீஸ் சேகர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, ஜி.தும்மலப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கலந்து கொண்டு இலவச வீட்டுமனை பட்டா, வருமான சான்றிதழ்கள், சாதி சான்றிதழ்கள் ஆகிய நலத்திட்ட உதவிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்திக்கழகம் நிருவாக இயக்குநர் மரு.எஸ்.அனீஸ் சேகர், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.ஜெயபாரதி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், நிலக்கோட்டை வட்டாட்சியர் திரு.விஜயலட்சுமி, நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) திரு.குமரவேல், வத்தலக்குண்டு வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) திரு.முருகசேன் மற்றும் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.