World Ozone Day
செ.வெ.எண்:-67/2025
நாள்:-16.09.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழகத்தில் தழிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக ”உலக ஓசோன் தினம்” கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று(16.09.2025) தழிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக உலக ஓசோன் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஓசோனை பாதுகாப்போம் மற்றும் நெகிழியை தவிர்ப்போம் என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறப்பு விருந்தினராக உதவிப் பொறியாளர் திருமதி. அ.வினோதினி அவர்கள் ஓசோனின் முக்கியத்துவத்தைப் பற்றியும், மஞ்சப்பை விழிப்புணர்வு மற்றும் நீர் மற்றும் காற்று மாசுபாடு குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு உரையாற்றினார். செவ்வி லேக்காவர்ஷின் மாவட்ட பசுமைத்தோழி திண்டுக்கல் மாவட்டத்தின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் குறித்து மற்றும் மாபெரும் நெகிழி சேகரிப்பு குறித்து உரையாற்றினார். இந்நிகழ்வில் விருந்தினராக முனைவர்.எஸ்.சுதா புல முதல்வர் தலைமை உரையாற்றினார்.
அதனை தொடர்ந்து முனைவர். ஜேதிவ்யா, உதவி பேராசிரியர், கட்டிடவியல் துறைத்தலைவர் முனைவர் எம்.செந்தில்குமார், உதவி பேராசிரியர் மின் மற்றும் மின்னணுவியல் துறைத்தலைவர், அண்ணா பல்கலைக்கழகம் திண்டுக்கல் அவர்கள் விழாவில் உரையாற்றினார்கள். நிகழ்வின் போது அனைத்து மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும், தழிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக மஞ்சப்பை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் தழிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டன. மேலும், இவ்விழாவில் பேராசிரியர் பெருந்தகைகளும், மாணவ மாணவியர்களும் பங்காற்றி விழா சிறப்பாக நடைபெற்றது.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.