Close

Sanitation Workers Welfare Board Meeting

Publish Date : 18/09/2025
.

செ.வெ.எண்:-69/2025

நாள்:-17.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரிய ஆய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தின் தலைவர் மாண்புமிகு டாக்டர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரிய ஆய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தின் தலைவர் மாண்புமிகு டாக்டர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று(17.09.2025) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தின் தலைவர் மாண்புமிகு டாக்டர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி அவர்கள் தெரிவித்ததாவது:-

தாட்கோ மூலம் தமிழ்நாடு தூய்மைப் பணியார் நல வாரியம் 2007-ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தற்காலிக தூய்மைப் பணிபுரிவோரை நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து, தூய்மைப் பணிபுரிவோர் மற்றும் அவரைச் சார்ந்தவர்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரியம் மூலம் விபத்துக்காப்பீட்டு திட்டம், இயற்கை மரண உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, தொழில்நுட்பப் பட்ட மேற்படிப்பு உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கண்கண்ணாடி உதவி, முதியோர் ஒய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் மாநகராட்சியில் 300 தூய்மைப் பணியாளர்களும், நகராட்சியில் 412 தூய்மைப் பணியாளர்களும், பேரூராட்சியில் 777 தூய்மைப் பணியாளர்களும், ஊராட்சியில் 2588 தூய்மைப் பணியாளர்களும் என மொத்தம் 4,077 தூய்மைப் பணியாளர்களும் பணிபுரிந்து வருகிறார்கள்.

திண்டுக்கல் மாநகராட்சியில் 300 தூய்மைப் பணியாளர்களும், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 144 தூய்மைப் பணியாளர்களும், பழனி நகராட்சியில் 149 தூய்மைப் பணியாளர்களும், கொடைக்கானல் நகராட்சியில் 119 தூய்மைப் பணியாளர்களும் என மொத்தம் 712 தூய்மைப் பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனார்.

மேலும், நகராட்சிகளில் பணியாற்றி வரும் 201 பணியாளர்களுக்கும், பேரூராட்சியில் பணியாற்றி வரும் 371 பணியாளர்களுக்கும் என மொத்தம் 572 தூய்மைப் பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசுதாரகள் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 9 மாணவர்களுக்கு ரூ.12,500 கல்வி உதவித் தொகையும், 3 பயனாளிகளுக்கு அடையாள அட்டைகள் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தின் தலைவர் மாண்புமிகு டாக்டர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் திரு.செந்தில்முருகன், மாவட்ட மேலாளர் திரு.செல்வகுமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.ப.ராஜகுரு, தூய்மை பணியாளர் நலவாரிய உறுப்பினர்கள் திரு.பெ.தங்கவேல், திரு.கு.மகாலிங்கம். திரு.தி.அரிஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.