Thooimai Mission 2.0
செ.வெ.எண்:-78/2025
நாள்: 19.09.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தூய்மை மிஷன் 2.0 இயக்கத்தை இன்று செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து அலுவலகம் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பதற்கான தூய்மை உறுதிமொழியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் ஏற்றனர்.
மாநிலம் முழுவதும் நிலையான கழிவு மேலாண்மை செயல்பாடுகளை சிறப்பாக மேற்கொள்ள “தூய்மை இயக்கம்” என்ற திட்டம் தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் ஜூன் 5, 2025 உலக சுற்றுச்சூல் தினத்தன்று மாநிலம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் குப்பை சேகரிப்பு 1.0 மற்றும் தூய்மைபடுத்தும் இயக்கத்தை துவக்கி வைத்தார்கள்.
திண்டுக்கல் மாவட்டம், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (19.09.2025) தூய்மை மிஷன் 2.0 இயக்கத்தை துவக்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கான தூய்மை உறுதிமொழியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் மேற்கொண்டனர்.
சுத்தமே சுகாதாரம் என்பதை என் வாழ்வியல் வழிமுறையாய் கடைபிடிப்பேன். தூய்மை மற்றும் சுகாதாரத்துடன் கூடிய வளர்ச்சியே எனது இலட்சியம். எனது அலுவலகத்தையும் அதன் சுற்றுப்புறத்தையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்வேன். அலுவலகத்தில் காகிதங்களின் பயன்பாட்டினை குறைப்பதற்கான தொடர் முயற்சிகளை மேற்கொள்வேன். உணவருந்தும் இடம், கழிப்பறை ஆகியவற்றை முறையாக பயன்படுத்துவதோடு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க ஒத்துழைப்பு நல்குவேன். மீதமான உணவுப்பொருட்களை தனியாக சேகரித்து உரிய முறையில் அப்புறப்படுத்துவேன். தூய்மையை பேணிக் காப்பது என் அலுவலகக் கடமைகளில் ஒன்றாகும் என்பதை நான் நன்கறிவேன்.
மேலும், தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி தூய்மையை பேணிக் காக்க அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வேன் எனவும் உறுதி கூறுகிறேன் என தூய்மை மிஷன் உறுதிமொழியினை அரசு அலுவலர்கள் தூய்மைக்காவலர்கள், துப்புரவுப்பணியாளர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் இணைந்து எடுத்துக் கொண்டனர்.
இதன் இரண்டவாது கட்ட செயல்பாடாக கழிவு சேகரிப்பு 2.0 நிகழ்வு 19.09.2025 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகக்கட்டிடம் மற்றும் வளாகத்திலுள்ள அனைத்து துறை அலுவலகங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையிலுள்ள கோட்டாட்சியர், வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலகங்கள், பிர்கா அலுவலகங்கள், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சி அலுவலகங்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் திட்ட அலுவலர் அலுவலகங்கள், அங்கன்வாடி மையங்கள், மேலும் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணி துறை, போக்குவரத்து துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை துறை சார்ந்த மாவட்ட, வட்டார நிலை அலுவலகங்கள் 1996 அலுவலகங்களில் தூய்மை மிஷன் – கழிவு சேகரிப்பு 2.0 பணிகள் நடைபெற்றுள்ளது.
தூய்மை மிஷன் கழிவு சேகரிப்பு 2.0 நிகழ்வில் அலுவலகத்தில் பயன்பாடின்றி உள்ள கழிவுகள் பிளாஸ்டிக் (மென்மையானது) “பாலிதீன் பைகள் / பால் பை / எண்ணெய் பை / உணவுப் பொட்டலம் / டெட்ரா பொட்டலம் (பிஸ்கட், சிப்ஸ்)”, பிளாஸ்டிக் (கடினமானது)பிளாஸ்டிக் (ஹார்பிக், தண்ணீர் பாட்டில், பெட் பாட்டில்கள், உடைந்த பிளாஸ்டிக் நாற்காலிகள், பொம்மைகள், கடிகாரம் & கடிகாரம் போன்றவை)/ சிமென்ட் பைகள்/அரிசி பைகள் போன்றவை-, தாள் (கலப்பு)செய்தித்தாள் (தமிழ்) செய்தித்தாள் (ஆங்கிலம்) பயன்படுத்திய ஏ4 தாள்கள்/பழைய புத்தகங்கள், கண்ணாடி (உடைந்த)கண்ணாடி பாட்டில்கள், கண்ணாடி (உடைக்கப்படாதது), உலோகங்கள் துருப்பிடிக்காத எஃகு (பழைய பாத்திரங்கள்)/ இரும்புத் துண்டு (சுழற்சி, தள்ளு வண்டி போன்றவை, / அலுமினிய துண்டு / தாமிரம் (ஏசி குழாய்கள், கம்பிகள் போன்றவை,) / பித்தளை (குழாய்கள், பாத்திரங்கள் போன்றவை), அட்டைஅட்டை / அட்டைப்பெட்டி, மின்-கழிவுகள் CRT தொலைக்காட்சி (பெட்டி டிவி)/ குளிர்சாதன பெட்டி / சலவை இயந்திரம் / மைக்ரோவேவ் ஓவன் / மிக்சர் கிரைண்டர் / சீலிங் பேன் / டேபிள் பேன் / லேப்டாப் / CPU / மவுஸ் / கீ போர்டு / LCD மானிட்டர், சுவரில் பொருத்தப்பட்ட டிவி / பிரிண்டர் / ஃபோட்டோஸ்டாட் மெஷின் / இரும்பு பெட்டி / மோட்டார்கள் / செல்போன் / தொலைபேசி / ரேடியோ / மின்சார கேபிள் (காப்பர் கம்பி கேபிள்) / மோடம் & சார்ஜர் / ஏர் கண்டிஷனர்கள் / இன்வெர்ட்டர் / பேப்பர் ஷ்ரெடர் / ஹார்டு டிரைவ்கள் மரம் & தளபாடங்கள் உடைந்த மர தளபாடங்கள் (மீண்டும் பயன்படுத்த முடியாதது), மற்ற கழிவு சாக்குப் பைகள் (சணல் பைகள்) ஆகியவைகள் 9 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. பிரித்து வகைப்படுத்தப்பட்ட கழிவுகளை அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் மாநில அளவில் நிர்ணயித்து தரப்பட்டுள்ள குறைந்தபட்ச கழிவு மதிப்பு தொகைக்கு குறையாமல் விற்பனை செய்திட, அனைத்து அலுவலகங்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு அலுவலகங்களில் நீண்ட நாட்கள் பயன்பாடின்றி குப்பைகளாக இருந்த கழிவுகள் அகற்றப்பட்டு தூய்மையான சுற்றுப்புறசூழல் கொண்ட அழகாக காட்சியளிக்கும் அரசு அலுவலகங்காக மாற்றப்பட்டு வருகின்றன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், திருமதி.பெ.திலகவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.கோட்டைச்சாமி, உதவி திட்ட அலுவலர்(உட்கட்டமைப்பு -2) திரு.எம்.பிரகாஷ், துணை ஆட்சியர் (பயிற்சி) திருமிகு.மு.ராஜேஸ்வரி சுவி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.மு.இராமநிதி, வட்டார ஒருங்கிணைப்பாளர் திருமதி.பொ.நாகஜோதி, ஊராட்சி செயலர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். தூய்மை மிஷன் கழிவு சேகரிப்பு 2.0 நிகழ்வில் மாவட்டம் முழுவதும் 50,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பித்துள்ளனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.Oplus_16908288

.