Close

District Sports Office(Anna Marathon Race)

Publish Date : 29/09/2025

செ.வெ.எண்:-107/2025

நாள்:-27.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டம் போட்டி 30.09.2025 அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்

அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே ஊக்குவிக்கும் பொருட்டு மாரத்தான் போட்டிக்கு இணையான மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டம் போட்டி 30.09.2025 அன்று காலை 6.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைக்க உள்ளார்கள்.

போட்டியானது கீழ்காணும் 2 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் நடத்தப்பட உள்ளது. இப்போட்டியில் 17 வயதிற்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு பணியாளர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், 25 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

மேற்காணும் போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகையாக தலா முதல் பரிசு ரூ.5,000/-, இரண்டாம் பரிசு ரூ.3000/-, முன்றாம் பரிசு ரூ.2000/- வீதமும், நான்காம் ஆம் இடம் முதல் பத்தாம் இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.1000/- வீதம் பரிசு தொகை (வங்கியில் வரவு வைக்கப்படும்) மற்றும் தகுதிச்சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

போட்டியில் கலந்து கொள்ள வரும் மாணவ, மாணவிகள் பள்ளி தலைமையாசிரியரிடமும், கல்லூரி முதல்வரிடமும் வயது சான்றிதழ் கண்டிப்பாக பெற்று வருதல் வேண்டும்.பொதுமக்கள் அவர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை நகல் கண்டிப்பாக கொண்டு வருதல் வேண்டும். போட்டியில் பங்கேற்பவர்கள் உறுதி ஆவண படிவத்தை போட்டி துவங்கும் இடத்தில் பெற்று பூர்த்தி செய்து பங்கேற்க வேண்டும். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகை வங்கியில் கணக்கில் வரவு வைக்கப்படும். எனவே வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் கொண்டு வருதல் வேண்டும். போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 30.09.2025 அன்று காலை 6.00 மணிக்கு போட்டி துவங்கும் இடத்தில் ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் – 624 004 முகவரியிலும் 7401703504 என்ற கைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.