Close

Collector Inspection – Kodaikanal Panchayat Union

Publish Date : 04/10/2025
.

செ.வெ.எண்: 111/2025

நாள்: 29.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைகிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைகிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கொடைக்கானல் செண்பகனூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஐயாயிரம் வெவ்வேறு வகையான வனவிலங்குகள், இருநூற்றுக்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சிகள், உள்ளூர் பறவைகள், பல்வேறு வகையான பாம்பு வகைகள் மற்றும் பழங்கால நாணயங்களை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து விலங்குகள் மற்றும் பறவைகளின் பதப்படுத்தப்பட்ட உடல்களும், எலும்புகூடுகளும், தோல்களும் கண்ணாடி ஜாடிகளில் வைக்கப்பட்டிருந்த அலமாரிகளை ஆகியவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.

தொடர்ந்து, அடுக்கம் ஊராட்சி, பெருமாள்மலை பிரிவில் ரூ.3.70 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பொதுகழிப்பறை கட்டுமான பணிகளை பார்வையிட்டார். மேலும், 15வது நிதிக்குழுவின் நிதியுதவி திட்டத்தின்கீழ் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், அடுக்கம் ஊராட்சி பெருமாள்மலை பிரிவு பொதுமக்களிடம் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, வில்பட்டி ஊராட்சி பேத்துப்பாறையில் நடைபெற்று வரும் மயான எரிமேடை அமைக்கும் பணிகள், சுற்றுசுவர், காத்திருப்போர் கூடம், குடிநீர் வசதி மற்றும் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.4.05 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், பாரதி அண்ணாநகரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் தலா ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் 16 புதிய வீடுகள் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, பொதுமக்கள் குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி, கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திரு.திருநாவுகரசு, கொடைக்கானல் வட்டாட்சியர் திரு.பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சாமிநாதன், உதவி பொறியாளர்கள் திரு.தங்கவேல், திரு.பாரதி, திரு.நவீன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

.