AD Welfare Hostel Inaguration
செ.வெ.எண்:-10/2025
நாள்:-06.10.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 20 சமூகநீதி விடுதிக் கட்டடங்களை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக இன்று(06.10.2025) திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, பழனியில் ஆதிதிராவிடர் சமூகநல விடுதியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 20 சமூகநீதி விடுதிக் கட்டடங்களை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக இன்று(06.10.2025) திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், பழனி, ஈடும்பன் கோவில் அருகில் இட்டேரி சாலையில் ரூ.07.62 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் சமூகநல விடுதியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள்.
பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் ஜாதி, மதம், இனம், கட்சி பாகுபாடு இன்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சுமார் 18.00 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில்தான் செயல்படுத்தப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயின்ற 10,996 மாணவ / மாணவியர்களுக்கு ரூ.1094.49 இலட்சம் தொகையில் உணவுக்கட்டணம் மற்றும் பல்வகை கட்டணம் செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின்கீழ் 49,354 மாணவ/ மாணவியர்களுக்கு ரூ.23,84,92,506/- மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ் 18,275 மாணவியர்களுக்கு ரூ.1,14,85,000/- மதிப்பீட்டில் பெண்கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. பள்ளிப்படிப்பு (PM – YASASVI Pre Matric Scholarship Scheme) கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 15,860 மாணவியர்களுக்கு ரூ. 3,62,26,000/- மதிப்பீட்டில் பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மேற்படிப்பு (PM – YASASVI Post Matric Scholarship Scheme) கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 23,358 மாணவியர்களுக்கு ரூ. 4,55,89,528/- மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் ஆத்திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறையின் கீழ் மொத்தம் 89 கல்லூரி மாணவர்களுக்கு சமூகநல விடுதி உள்ளது. இந்த விடுதிகளில் 4,442 கல்லூரி மாணவ, மாணவியர்கள் தங்கி பயன்று வருகின்றனர்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், பழனி வட்டாட்சியர் திரு.பிரசன்னா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.