Collector Inspection – Vedasandur
செ.வெ.எண்:-16/2025
நாள்:-07.10.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்க உள்ளார்கள் – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் 08.10.2025 மற்றும் 09.10.2025 ஆகிய இரு தினங்களில் ஆய்வு கூட்டம் மற்றும் பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு 08.10.2025 (புதன் கிழமை) அன்று மாலை 04.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில் கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளபட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்துகின்ற திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு செய்ய உள்ளார்கள்.
அதனைத்தொடர்ந்து, 09.10.2025 (வியாழக்கிழமை) அன்று வேடசந்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார்கள்.
தொடர்ந்து, வேடசந்தூர் பகுதியில் சுமார் 140 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.