Grama Sabha Meeting Agenda
செ.வெ.எண்:- 14/2025
நாள்: 08.10.2025
திண்டுக்கல் மாவட்டம்
கிராம ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் 11.10.2025 அன்று நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்
11.10.2025 அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து 306 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் முற்பகல் 11.00 மணி அளவில் நடைபெற உள்ளது. மேற்கண்ட கிராம சபை கூட்டங்களுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய கூட்டப் பொருள்கள் விவரம்
பொருள் 1 : கிராம மக்களின் 3 அத்தியாவசியமான தேவைகளை தேர்வு செய்து
கிராமசபை ஒப்புதல் பெறுதல்.
பொருள் 2 : சாதிப் பெயர்கள் கொண்ட குக்கிராமங்கள் சாலைகள் மற்றும் தெருக்கள் பெயரை மாற்றுதல் குறித்து விவாதித்தல்.
பொருள் 3: கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல்.
பொருள் 4: கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை
பொருள் 5: ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட்
வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்
பொருள் 6: கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து
விவாதித்தல்.
பொருள் 7: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்
பொருள் 8: சபாசார் செயலி செயல்பாடுகள்:
பொருள் 9: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்:
பொருள் 10: அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் II:
பொருள் 11: தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்ட
பொருள் 12: தொழிலாளர் துறை:
பொருள் 13: தமிழ் நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் :
பொருள் 14: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன்
பயிற்சி திட்டம்:
எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து 306 கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள மக்கள் கிராம சபைகளில் தவறாது கலந்து கொண்டு விவாதத்தில் தங்களது கருத்துக்களை தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.