Vedasandur Tanpid Asset Auction
செ.வெ.எண்:-17/2025
நாள்:-08.10.2025
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிக்கை செய்தி
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டம், செட்டிநாயக்கன்பட்டி கிராமம், ஆர்.எம்.காலனி 7 வது கிராஸ் என்ற முகவரியில் இயங்கி வந்த லக்ஸ்வர்யா அக்ரோ பார்ம்ஸ் இந்தியா (பி) லிமிடெட் என்ற நிதிநிறுவனத்திற்கு சொந்தமான வேடசந்துார் வட்டத்தில் உள்ள பின்வரும் புலங்களில் உள்ள நிலம், கட்டிடங்கள், மரங்கள் மற்றும் கிணறு முதலானவை, தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்டம் 1997-ன் கீழ் தகுதி பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் திண்டுக்கல் அவர்களால் 14.10.2025 அன்று முற்பகல் 11.00 மணியளவில் வேடசந்துார் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், உசிலம்பட்டி கிராமம், புல எண்.163/1பி, விஸ்தீரணம் 22400 சதுர மீட்டர் (5.54 ஏக்கர்), (குறும மதிப்பு ரூ.1,81,44,000/-) அம்மாபட்டி கிராமம், புல எண்.370/1ஏ, விஸ்தீரணம் 0.01.00 ஹெக்டேர் (0.02 ஏக்கர்), (குறும மதிப்பு ரூ.1,27,694/-) மற்றும் அம்மாபட்டி கிராமம், புல எண்.371/1, விஸ்தீரணம் 0.80.50 ஹெக்டேர் (1 ஏக்கர் 99 சென்ட்), (குறும மதிப்பு ரூ.10,25,480/-) ஆகிய சொத்துக்களை பொது ஏலத்தில் எடுக்க விரும்புவோர், ஏல நிபந்தனைகள் தொடர்பான விபரங்கள் திண்டுக்கல் மாவட்ட இணையதளத்தில் (www.dindigul.nic.in). பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திண்டுக்கல், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் பழனி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், திண்டுக்கல், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், கொடைக்கானல் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். இவ்விபரங்கள் அந்தந்த அலுவலக விளம்பர பலகையிலும் ஒட்டப்பட்டுள்ளது என்றும். ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏலத்தில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும், நிறுவனத்திற்குச் சொந்தமான மேற்படி அசையா சொத்தினை நிலையில் உள்ள விதத்தில் உள்ளவாறே ஏலம் விடப்படும் என்றும், தகுதி பெற்ற அலுவலர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களால் தெரிவிக்கப்படுகிறது.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.