Forest Dept
செ.வெ.எண்: 20/2025
நாள்: 10.10.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற வன உயரின வார விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் திரு.பு.மு.ராஜ் குமார்,இ.வ.ப., பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற வன உயரின வார விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் திரு.பு.மு.ராஜ் குமார்,இ.வ.ப., பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை இன்று(10.10.2025) வழங்கினார்.
வன விலங்கு வாரம் என்பது அக்டோபர் முதல் வாரத்தில் வன விலங்கு பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகக் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும்.
தமிழ்நாட்டில் 2025-ம் ஆண்டு வன விலங்கு வாரம் அக்டோர் 02-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 2025-ம் வருடம் மனித வனவிலங்கு ஒருங்கிணைந்த வாழ்வு என்ற தலைப்பின்கீழ் வன உயிரின வாரவிழா திண்டுக்கல் வனக்கோட்டத்தின் சார்பில் அய்யலூர், அழகர் கோவில், நத்தம், சிறுமலை, கன்னிவாடி, வத்தலகுண்டு, ஒட்டன்சத்திரம் வனச்சரகத்தின் சார்பில் ஒரு வார காலமாக வன உயிரினங்களின் முக்கியத்தும் குறித்த முகாம்கள், விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்றது.
மேலும், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கட்டுரைப் போட்டி, ஓவிய போட்டிகள், பேச்சுபோட்டிகள், வினாடி வினா, மற்றும் பறவைகள் பார்த்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த 108 பள்ளி மாணவ மாணவியர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் திரு.பு.மு.ராஜ் குமார்,இ.வ.ப., அவர்கள் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இவ்விழாவில் திண்டுக்கல் வன விரிவாக்க அலுவலர், உதவி வனப்பாதுகாவலர் திருமதி கு.வேல்மணி நிர்மலா, திண்டுக்கல் வனக்கோட்ட வனச்சரக அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.