Collector Inspection TRB Exam Center
செ.வெ.எண்:-25/2025
நாள்:-12.10.2025
திண்டுக்கல் மாவட்டம்v
ஆசிரியர் தேர்வு வாரியம் PG TRB தேர்வு நடைபெறும் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆசிரியர் தேர்வு வாரியம் PG TRB தேர்வு நடைபெறும் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(12.10.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் முதுகலை ஆசிரியர், உடற் கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணிணி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பதவிகளுக்கான போட்டித் தேர்வினை கடந்த ஜூலை மாதம் அறிவித்து இருந்தது. அதன்படி விண்ணப்பித்து இருந்த அனைத்து தேர்வர்களுக்கும் இன்று (12.10.2025) முற்பகல் தேர்வு நடைபெறுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இத்தேர்வினை 6,547 தேர்வர்கள், திண்டுக்கல் கல்வி மாவட்ட அளவில் 18 தேர்வு மையங்கள் மற்றும் பழநி கல்வி மாவட்ட அளவில் 7 தேர்வுமையங்கள் என மொத்தம் 25 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வில் 64 PWD CANDIDATES தேர்வர்கள் மற்றும் 15 SCRIBE CANDIDATES தேர்வர்கள் சொல்வதை எழுதுபவர்களாக உள்ளனர். இத்தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. இன்று நடைபெறும் ஆசிரியர் தேர்வு வாரியம் PG TRB தேர்வினை மொத்தம் 6101 நபர்கள் தேர்வு எழுதினார்கள்
இத்தேர்வினை நன்முறையில் நடத்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகத்தின் பிறதுறைகளும் இணைந்து தேர்வர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி, அவசர கால மருத்துவ உதவி, தடையில்லா மின்சாரவசதி, சுகாதரம் மற்றும் குடிநீர்வசதி போன்ற அடிப்படைவசதிகள் செய்யப்பட்டுஉள்ளது. தேர்வர்கள் பாதுகாப்பான முறையில் தேர்வு எழுத ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் காவல்துறை பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மந்தனகட்டுக்கள் காவல்துறை பாதுகாப்புடன் தேர்வுமையங்களுக்கு வழித்தட அலுவலர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தேர்வு மையத்திலும் frisking பணிக்காக ஆண், பெண் காவலர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும்படை அமைக்கப்பட்டு ஒவ்வொரு தேர்வுமையமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறை கண்காணிப்பு அலுவலராக உள்ள இணைஇயக்குநர் (மேல் நிலைக்கல்வி ) மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் இணைந்து அனைத்து தேர்வுமையங்களிலும் தேர்வுப்பணிகள் நன்முறையில் செயல்பட கண்காணித்து வருகின்றனர். மேலும் நிலையான படை உறுப்பினராக இரு ஆசிரியர்கள் ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இத்தேர்விற்காக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தமாக 580 பேர் தேர்வுப்பணியில் ஈடுபட்டு உள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.