HEALTHCARE CERTIFICATE COURSE
செ.வெ.எண்: 44/2025
நாள்: 17.10.2025
திண்டுக்கல் மாவட்டம்
2025-2026 ஆம் கல்வியாண்டிற்க்கான திண்டுக்கல் மாவட்டத்தின் அரசு மருத்துவக் கல்லூரியிலுள்ள மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் மாவட்ட அளவிலான சேர்க்கை வாயிலாகவும், அதனைத் தொடர்ந்து முன் விண்ணப்பமில்லா நேரடி சேர்க்கை முறையிலும் நடைபெறும் அனுமதிக்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
1.வழங்கப்படும் சான்றிதழ் பயிற்சிகள்:
| வ.எண் | பாடப்பிரிவின் பெயர் |
| 1 | Emergency Care Technician |
| 2 | Dialysis Technician |
| 3 | Anesthesia Technician |
| 4 | Theatre Technician |
| 5 | Orthopeadic Technician |
| 6 | Multi Purpose Hospital Worker (MPHW) |
2. காலியிடங்கள்:
இம்மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுரியில் சான்றிதழ் படிப்புகளுக்கு மொத்தமாக 18 இடங்கள் காலியாக உள்ளன. காலியிடங்கள் தொடர்பான விவரங்கள் https://gmcdindigul.ac.in/ என்ற வலைதளத்திலும் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுரியின் அறிவிப்பு பலகையிலும் கிடைக்கப்பெறும்.
| S.No | Name of the Course | Vacant | Total |
| 1 | Emergency Care Technician (1year) | 1 | 1 |
| 2 | Dialysis Technician (1 year) | 2 | 2 |
| 3 | Anaesthesia Technician (1 year) | 0 | 0 |
| 4 | Theatre Technician (1 year) | 1 | 1 |
| 5 | Orthopaedic Technician (1year) (Male) |
5 | 5 |
| 6 | Multi Purpose Hospital Worker | 9 | 9 |
| 7 | Total | 18 | 18 |
3.தகுதி:
1. 31.12.2025 அன்று விண்ணப்பத்தாரர் 17 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்
2. தெரிவுக்/தேர்வுக்குழுவால் பரிந்துரைக்கப்பட்டவராக பத்தாம் வகுப்பு/மேல்நிலை பள்ளிப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. இடஒதுக்கீடு : சேர்க்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 5% இடஒதுக்கீடு உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டு நடைமுறை பின்பற்றப்படும்.
4.கல்விக்கட்டணம்: ரூ. 1450/- மட்டும் (ஓராண்டுக்கு)
3. விண்ணப்பிக்கும் முறை (கட்டணமில்லை):
திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி அலுவலகத்தில் விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படும்.
அட்டவணை:
| 1 | நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் நாள்: | 14.11.2025 வரை |
| 2 | முழு மாணவர் சேர்க்கை நிறைவு பெறும் நாள்: | 14.11.2025 மாலை 5.00 மணி வரை |
4. சேர்க்கை நடைபெறும் இடம்:
அரசு மருத்துவக்கல்லூரி, திண்டுக்கல் மாவட்டம்.
| 1.தங்கும் இடம் வசதி உண்டு( நிபந்தனைகளுக்கு உட்பட்டது) 2. வேலைவாய்ப்பு வசதிகள் உருவாக்கித்தரப்படும். ( நிபந்தனைகளுக்கு உட்பட்டது) |
5. தேவைப்படும் ஆவணங்கள்:
1) மேனிலைப்பள்ளி மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
2) மாற்று சான்றிதழ்
3) இருப்பிடச் சான்றிதழ் (பொருந்துமாயின்)
4) சாதிச் சான்றிதழ்
5) வயது சான்று (பிறப்பு/பள்ளிச்சான்றிதழ்)
6) மாவட்ட மருத்துவ வாரியத்திடமிருந்து பெறப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ் (பொருந்துமாயின்)
7) ஆதார் அட்டை அல்லது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை
6. தெரிவு செய்யும் நடைமுறை பரிந்துரைக்கப்பட்ட விதிகளின்படி முற்றிலும் தகுதி மற்றும் வகுப்புவாரி இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அமையும். கலந்தாய்வின் போது ஒதுக்கீடு ஆணைகள் அந்த இடத்திலேயே வழங்கப்படும்.
7. சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் திறன் அடிப்படையிலான சான்றிதழ் பாடப்பிரிவுகளில் பயில்வதற்கு இந்த வாய்ப்பை தகுதியுள்ள மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
8. இந்தப் பாடப்பிரிவுகளில் சேர்க்கப்பட்ட மாணவர்கள், பொருந்தக்கூடிய விதிகளுக்கு உட்பட்டு, “வெற்றி நிச்சயம்” திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறத் தகுதியுடையவர்களாக இருக்கலாம்.
10. உதவி மைய தொடர்பு: 8754691943
11. மின்னஞ்சல் முகவரி: dean.mchdindigul@gmail.com
12. இணையதளம் முகவரி : https://gmcdindigul.ac.in
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.