DDAWO DEPT
செ.வெ.எண்:-51/2025
நாள்:-23.10.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்கள் விருதுகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
உலக மாற்றுத்திறனாளிகள் தினமான 03.12.2025-அன்று மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியன தேர்வு செய்யப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விருதுகள் வழங்கப்படவுள்ளது.
அதன்படி, மாற்றுத்திறனாளிகளில் சிறந்தபணியாளர்/சுயதொழில் புரிபவர்களுக்கு மாநில அளவில் 10 விருதுகளும், பார்வைத் திறன் மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்குக்கான ஹெலன் கெல்லர் விருது, சிறந்த ஆசிரியர் (அறிவுசார் குறைபாடுடையோருக்கு கற்பித்தல்), சிறந்த சமூகப் பணியாளர், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனம், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிலும் செவித்திறன் குறையுடையோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர் ஆகியோருக்கு தலா 1 விருதுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர், பொதுக் கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியோருக்கு தலா 2 விருதுகளும் வழங்கப்படும். விருது ஒன்றுக்கு 10 கிராம் எடையுள்ள தங்கபதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.
மேற்காணும், விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் விருதாளர்கள், https://awards.tn.gov.in என்ற வலைத்தளத்தில் 26.10.2025-அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வலைத்தளத்தில் விண்ணப்பிக்காத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும், விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை 26.10.2025-அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் சமர்ப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.