Close

ODDANCHATRAM MUNICIPALITY

Publish Date : 27/10/2025

செ.வெ.எண்:-60/2025

நாள்:-25.10.2025

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிகை செய்தி

ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில், 27.10.2025ம் தேதியில் வார்டு எண்2, 9, 10, 13 மற்றும் 14 காலை 11.00 மணியளவிலும், வார்டு எண்11க்கு மாலை2.00 மணியளவிலும், வார்டுஎண் 1, 3, 4, 5, 6, 7, 8, 12, 15, 16, 17, 18 க்கு மாலை3.00 மணியளவிலும் சிறப்புக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளது.

அக்கூட்டத்தில் நகராட்சியின் மூலம் வழங்கப்படும் சேவைகளான குடிநீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலைகள் மற்றும் பூங்கா பராமரிப்பு, பூங்கா பராமரிப்பு, மழைநீர் வடிகால் பராமரிப்பு பணிகளில் குறைபாடுகள் தெரிவித்தல் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட செயல்பாடுகள், நகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை புனரமைத்தல், நகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள நீர்நிலைகளை மாசு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனைகளை தெரிவித்திட அந்தந்த வார்டு நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் கோரிக்கைகள் பெறப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவுள்ளது. எனவே, ஒட்டன்சத்திரம் நகராட்சி பொது மக்கள் சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.