Close

AC EXCISE – Tasmac Closed

Publish Date : 30/10/2025

செ.வெ.எண்:-71/2025

நாள்:-29.10.2025

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன் நகரில் வருகின்ற 30.10.2025 அன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை தினம் அனுசரிக்கப்பட இருப்பதால், பொது அமைதி மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கிணைப் பாதுகாக்கும் பொருட்டும், குருபூஜை நிகழ்வு அமைதியாக நடைபெறும் பொருட்டும், திண்டுக்கல் மாவட்ட எல்லையோரத்தில் அமைந்துள்ள அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைரோடு கடை எண்.3161 மற்றும் பள்ளப்பட்டி சிப்காட் கடை எண்.3342, விளாம்பட்டி காவல் நிலையத்திற்குட்பட்ட கிருஷ்ணாபுரம் (மட்டப்பாறை) கடை எண்.3345, விளாம்பட்டி கடை எண்.3343, அணைப்பட்டி கடை எண்.3341 மற்றும் விருவீடு காவல் நிலையத்திற்குட்பட்ட ரெங்கப்பநாயக்கன்பட்டி கடை எண்.3318, விருவீடு (சாந்திபுரம்) கடை எண்.3344 ஆகிய அரசு மதுபானக் கடைகள், அத்துடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மனமகிழ் மன்றத்தில் அமைந்துள்ள மதுபானக்கூடம் ஆகியவற்றை 29.10.2025 அன்று மாலை 6 மணி முதல் 30.10.2025 அன்று முழுவதும் விற்பனையின்றி தற்காலிகமாக மூடுவதற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களால் ஆணையிடப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.