Close

BC WELFARE DEPT

Publish Date : 04/11/2025

செ.வெ.எண்:-05/2025

நாள்:-01.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிகை செய்தி

மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழுவானது தனது சுற்றறிக்கை எண்.13, நாள் 13.10.2025-ல், ஹஜ் 2026-ல் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்ப, நிகர்நிலை மூலம் (online) விண்ணப்பங்களை வரவேற்கிறது. தற்காலிக பணிக்காலம் 13.04.2026 முதல் 05.07.2026 வரை சுமார் இரண்டு மாதகாலமாகும். மத்திய/மாநில அரசு ஊழியர்கள், துணை இராணுவப்படைகளில் பணியாற்றும் தகுதிவாய்ந்த அலுவலர்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் அல்லது மத்திய மாநில அரசின் கீழ் இயங்கும் பொது நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்கள், விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள் ஆவர்.

மாநில ஹஜ் ஆய்வாளர்கள் சவூதி அரேபியாவில் பணிபுரியும்காலம் பணிக்காலமாக கருதப்படும். இப்பணிக்காக நிகர்நிலை மூலம் (online) விண்ணப்பிக்கும் முறை, தகுதி, நியமனமுறை ஆகியன மும்பை இந்திய ஹஜ் குழுவின் இணைய முகவரியின் (www.hajcommittee.gov.in) மூலம் அறிந்து பயன்பெறலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.