Monday Grievance Day Petition
செ.வெ.எண்:-06/2025
நாள்:-03.11.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (03.11.2025) நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமைதோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 272 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், மாவட்ட திட்ட அலுவலகம் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரத்தில் 4 வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் பயிலும் 2-6 வயதுடைய குழந்தைகளுக்கு குழந்தைகள் அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்ட முன்பருவக்கல்வி உபகரணங்களை ஆத்தூர் வட்டார அங்கன்வாடி மையங்களுக்கு 10 உபகரணங்கள் தலா ரூ.1,410/- என்ற வீதத்தில் ரூ.14,100/- மதிப்பீட்டிலும், திண்டுக்கல் கிராமத்திற்கு ரூ.1,410/- என்ற வீதத்தில் ரூ.14,100/- மதிப்பீட்டிலும், ரெட்டியார்சத்திரம் வட்டார அங்கன்வாடி மையங்களுக்கு 09 உபகரணங்கள் தலா ரூ.1,410/- என்ற வீதத்தில் ரூ.12,690/- மதிப்பீட்டிலும், சாணார்பட்டி வட்டார அங்கன்வாடி மையங்களுக்கு 10 உபகரணங்கள் தலா ரூ.1,410/- என்ற வீதத்தில் ரூ.14,100/- மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.54,990/- மதிப்பீட்டிலான 39 உபகரணங்களையும் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் 1 நபருக்கு சரக்கு வாகனம் வாங்குவதற்கு நலத்திட்ட உதவித் தொகையாக ரூ.9,57,400/- மதிப்பீட்டிலான காசோலையினையும், தமிழ்நாடு அரசு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சிறு விவசாயிகள் வேளாண் வணிக நடபமைப்பு வாயிலாக உருவாக்கப்பட்ட ஒட்டன்சத்திரம் அக்ரோ உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு ரூ.4.00 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டாம் தவணை சமநிலை பங்குத் தொகைக்கான காசோலையினையும், குறிஞ்சிமலர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திறகு ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டாம் தவணை சமநிலை பங்குத் தொகைக்கான காசோலையினையும்,
தமிழ் வளர்ச்சித்துறையின் வாயிலாக 14.10.2025-அன்று நடைபெற்ற 11,12-ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகளில் கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவனுக்கு ரூ.10,000-க்கான காசோலையினையும், கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிக்கு ரூ.7,000-க்கான காசோலையினையும், பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற வடமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிக்கு ரூ.10,000-க்கான காசோலையினையும், இரண்டாம் பரிசு பெற்ற வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவனுக்கு ரூ.7,000-க்கான காசோலையினையும் மற்றும் மூன்றாம் பரிசு பெற்ற அழகாபுரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிக்கு ரூ.5,000-க்கான காசோலையினையும்,
கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு 15.10.2025-அன்று நடைபெற்ற கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகளில் கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற எம்.வி.எம்.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிக்கு ரூ.10,000-க்கான காசோலையினையும், இரண்டாம் பரிசு பெற்ற பான் செக்கர்ஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிக்கு ரூ.7,000-க்கான காசோலையினையும் மற்றும் மூன்றாம் பரிசு பெற்ற பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவனுக்கு ரூ.5,000-க்கான காசோலையினையும், கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற காந்திபுரம் இலட்சுமி கல்வியியல் கல்லூரி மாணவனுக்கு ரூ.10,000-க்கான காசோலையினையும் மற்றும் மூன்றாம் பரிசு பெற்ற நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிக்கு ரூ.5,000-க்கான காசோலையினையும், பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற பான் செக்கர்ஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிக்கு ரூ.10,000-க்கான காசோலையினையும் மற்றும் இரண்டாம் பரிசு பெற்ற எஸ்.எஸ.எம்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவனுக்கு ரூ.7,000-க்கான காசோலையினையும்,
தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகம் மூலம் வழங்கப்பட்ட ஒருவார கால திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்ற 10 நபர்களுக்கு TNCWWB அடையாள அட்டைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வாயிலாக 3 நபர்களுக்கு ரூ. 3,43,200/- மதிப்பீட்டில் பேட்ரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளையும், 4 நபர்களுக்கு ரூ. 63,000/- மதிப்பீட்டில் சக்கர நாற்காலிகளையும், 1 நபருக்கு ரூ.3,285/- மதிப்பீட்டில் காது கேட்கும் கருவியினையும், 5 நபர்களுக்கு ரூ. 5,500/- மதிப்பீட்டில் ப்ரெய்லி வாட்ச்களையும்மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.க.செந்தில்வேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திரு.மகாலிங்கம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.அன்பழகன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.